நான் யாருக்கும் போட்டியாகவோ, காலி பண்ணவோ வரவில்லை – எமோஷ்னலாக பேசிய சிவகார்த்திகேயன்
Actor Sivakarthikeyan Emotional Speech Viral On Social Media: தமிழ் சினிமாவில் பிரபல நாயகனாக உள்ள சிவகார்த்திகேயன் தொடர்ந்து படங்களை தயாரித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் தாய் கிழவி பட விழாவில் சிவகார்த்திகேயன் எமோஷ்னலாக பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகம் ஆகி தற்போது முன்னணி நடிகராக வலம் வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் தொடர்ந்து சினிமாவில் இதுவரை 25 படங்களில் நாயகனாக நடித்துள்ளார். இதில் இறுதியாக நடிகர் சிவகார்த்திகேயன் பராசக்தி என்ற தனது 25-வது படத்தில் நடித்து இருந்தார். இந்தப் படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற நிலையில் அடுத்ததாக தனது 26-வது படத்திற்காக இயக்குநர் சிவக்குமார் முருகேசனுடன் கூட்டணி வைத்துள்ளார். இந்தப் படத்திற்கு சேயோன் என்று தலைப்பு வைத்துள்ளனர். படத்தின் அறிவிப்பு வீடியோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வந்தது. மேலும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் விரைவில் தொடங்க உள்ள நிலையில் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் தொடர்ந்து படங்களை தயாரித்தும் வருகிறார்.
அதன்படி நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் தற்போது உருவாகி உள்ள படம் தாய் கிழவி. இந்தப் படத்தில் நடிகை ராதிகா சரத்குமார் முன்னணி வேடத்தில் நடித்துள்ளார். இவருடன் இணைந்து நடிகர்கள் பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். மேலும் இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இந்தப் படத்தினை எழுதி இயக்கி உள்ளார். இந்த நிலையில் நேற்று படத்தின் ட்ரெய்லர் வெளியிட்டு விழா பிரமாண்டமாக நடைப்பெற்றது.




நான் யாருக்கும் போட்டியாகவோ, காலி பண்ணவோ வரவில்லை:
இந்த விழாவில் பிரபலங்கள் பலர் கலந்துகொண்டு பேசினர். மேலும் படத்தின் தயாரிப்பாளரான சிவகார்த்திகேயனும் கலந்துகொண்டு பேசினார். அவர் படத்தைப் பற்றி பேசியதைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் பேசியதாவது, நான் போட்டியிட இங்கே இல்லை.. யாரையும் குறை சொல்லவோ அல்லது தாக்கவோ நான் இங்கு இல்லை. நான் என் தொழில்துறைக்கு அர்த்தமுள்ள ஒன்றைச் செய்ய விரும்புகிறேன். தயவுசெய்து அதைச் செய்ய என்னை அனுமதியுங்கள்.. மக்கள் எப்போதும் எனக்கு ஆதரவளித்துள்ளனர், ஆனால் தொழில்துறையில் ஒரு சிலர் ஆதரிக்கவில்லை என்றும் எமோஷ்னலாக நடிகர் சிவகார்த்திகேயன் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இணையத்தில் வைரலாகும் நடிகர் சிவகார்த்திகேயனின் பேச்சு:
“I’m not here to compete.. I’m not here to trash or attack anyone. I want to do something meaningful for the industry. Please allow me to do it.. People have always supported me, but a few people in the industry haven’t..”
– #Sivakarthikeyan pic.twitter.com/yQEUkwRARi— Laxmi Kanth (@iammoviebuff007) February 23, 2026
Also Read… Anirudh: யார் ஹீரோ? ‘KH x RK’ திரைப்படம் குறித்து அனிருத் சொன்ன விஷயம்!