AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகி உள்ள ஜிவி பிரகாஷ் குமாரின் லக்கி தி சூப்பர்ஸ்டார் படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ!

Lucky the Superstar Movie OTT Review: இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் ஓடிடியில் நேரடியாக வெளியாகி உள்ள படம் லக்கி தி சூப்பர்ஸ்டார் படம். இந்தப் படம் எப்படி இருக்கிறது என்பது குறித்து தற்போது இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகி உள்ள ஜிவி பிரகாஷ் குமாரின் லக்கி தி சூப்பர்ஸ்டார் படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ!
லக்கி தி சூப்பர்ஸ்டார் Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 23 Feb 2026 20:05 PM IST

தமிழ் சினிமாவில் கடந்த 20-ம் தேதி பிப்ரவரி மாதம் 2026-ம் ஆண்டு வெளியான படம் லக்கி தி சூப்பர் ஸ்டார். இந்தப் படம் நேரடியாக ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகி உள்ளது. இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியான போதே ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது. ஓடிடியில் வெளியாகி உள்ள இந்தப் படம் தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. இந்தப் படத்தை இயக்குநர் உதய் மகேஷ் எழுதி இயக்கி உள்ளார். மேலும் இந்த லக்கி தி சூப்பர்ஸ்டார் படத்தில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் நாயகனாக நடித்து உள்ள நிலையில் மலையாளத்தில் பிரபல நடிகையாக வலம் வரும் நடிகை அனஸ்வரா ராஜன் நாயகியாக நடித்து இருந்தார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

அதன்படி இவர்களுடன் இணைந்து நடிகர்கள் மேக்னா சுமேஷ், தேவதர்ஷினி, டேனியல் அன்னி போப், சுப்பு பஞ்சு, மதுசூதன ராவ், கௌரி ஜானு, இளங்கோ குமரவேல், நமோ நாராயணா, காயத்திரி கிருஷ்ணன், ஈசன் சுஜாதா, வேட்டை முத்துக்குமார், தீபா, மகாநதி சங்கர், ஜாவா சுந்தரேசன் ஆகியோர் நடித்துள்ள நிலையில் படத்தில் வரும் நாய்களுக்கு நடிகர்கள் கோவை சரளா, மொட்டை ராஜேந்திரன், தம்பி ராமையா, மற்றும் ஜி.பி.முத்து ஆகியோர் குரல் கொடுத்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான கவிதாலயா புரடெக்‌ஷன்ஸ் சார்பாக தயாரிப்பாளர்கள் கந்தசுவாமி பரதன் மற்றும் புஷ்பா கந்தசாமி இணைந்து தயாரித்து இருந்தனர்.

ஓடிடியில் வெளியாகியுள்ள லக்கி படம் எப்படி இருக்கு?

இந்தப் படத்தின் தொடக்கத்திலேயே ஒரு நாய் குட்டி போடுவதற்கு காத்திருப்பது போல காட்டப்படது. அந்த நாய்க்கு நடிகை கோவை சரளா குரல் கொடுத்து இருந்தார். அவர் ஒரு பாலத்துக்கு அடியில் குட்டிப் போட்ட சிறிது நேரத்திலேயே மழை வெள்ளம் வந்து அனைத்துக் குட்டிகளையும் அடித்துக் செல்கிறது. இதில் கோவை சரளா குரல் கொடுத்த நாயும் தண்ணீரில் அடித்துச் செல்லப்படுகிறார்.

நீரில் மூழ்கி இருக்கும் போது மயக்கமடைந்த நிலையில் மீண்டும் ஒரு குட்டி போட்டபோது சுயநினைவிற்கு வருகிறார். அந்த குட்டியைக் காப்பாற்றி லக்கி என்று பெயர் வைக்கிறார். அதே நேரத்தில் ஆட்டிசம் உடைய குழந்தைக்கு அம்மா அப்பாவாக இருக்கிறார்கள் தேவதர்ஷினி மற்றும் சுப்பு பஞ்சு இருவரும். இதில் தேவதர்ஷினியின் தம்பியாக ஜிவி பிரகாஷ் குமார் நடித்து இருந்தார்.

Also Read… மணிரத்னம் – விஜய் சேதுபதி ஒப்பந்தமாகியுள்ள படம் முதலில் தனுஷிற்கு கூறிய கதையா? வைரலாகும் தகவல்

இவருக்கு ஆட்டிசம் குறைபாடு உடைய அக்கா மகள் மீது பாசம் அதிகம். அந்த குழந்தைக்கு கோவை சரளாவில் குரல் கொண்ட நாயின் குட்டியைக் கொண்டு வந்துகொடுக்கிறார். இதனை அந்த அம்மா நாய் தேடிக்கொண்டு இருந்த நிலையில் ஜிவி பிரகாஷின் அக்கா மகள் அந்த லக்கி என்ற நாய் குட்டியுடன் நெறுக்கமாகிறார். இப்படி இருக்கும் சூழலில் எதிர்பாராதவிதமாக லக்கி என்ற நாய் காணாமல் போய்விட அதனை எப்படி தேடி கண்டுபிடிப்பார்கள் என்பதே படத்தின் கதை. இந்தப் படம் தற்போது ஹாட்ஸ்டார் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

Also Read… இசையமைப்பாளர் சாய் அபயங்கர் தான் உண்மையான ஜாவா சுந்தரேசன் – ஆர்.ஜே.பாலாஜி கலகல பேச்சு