7 கோடி மக்கள் பார்க்கும் படத்தை 5 பேர் எப்படி முடிவு செய்யலாம் – சென்சார் போர் குறித்து விஷால் சொன்ன கருத்து
Actor Vishal About Censor Board: தமிழ் சினிமாவில் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறும் நாயகனாக வலம் வருகிறார் நடிகர் விஷால். இவர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் சென்சார் போர்ட் குறித்தும் அதன் செயல் குறித்தும் பேசியது இணையத்தில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
தமிழ் சினிமாவில் தயாரிப்பாளரின் மகனாக மக்களிடையே அறிமுகம் ஆன விஷால் கடந்த 2002-ம் ஆண்டு இயக்குநர் காந்தி கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான செல்லமே என்ற படத்தின் மூலமாக நடிகராக அறிமுகம் ஆனார். நடிகர் விஷால் நாயகனாக அறிமுகம் ஆன முதல் படத்திலேயே ஆக்ஷன் காட்சிகளில் கலக்கி இருந்ததைத் தொடர்ந்து அடுத்தடுத்தப் படங்கள் அவருக்கு ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த படங்களாகவே அமைத்தது. தொடர்ந்து நடிகர் விஷால் நடிப்பில் வெளியாகும் படங்கள் மக்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் நடிகர் விஷாலும் மக்களிடையே வரவேற்பைப் பெறும் நாயகனாக மாறினார். இந்த நிலையில் நடிகர் விஷால் நடிப்பில் கடந்த சில ஆண்டுகளாக வெளியாகும் படங்கள் விமர்சன ரீதியாக மட்டும் இல்லாமல் வசூலிலும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.
இந்த நிலையில் நடிகர் விஷால் தற்போது புருஷன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இயக்குநர் சுந்தர் சி எழுதி இயக்கி வரும் இந்தப் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிகை தமன்னா பாட்டியா நடித்து வருகிறார். மேலும் நடிகர் யோகி பாபு இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். படத்திற்கு இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி இசையமைத்து வரும் நிலையில் படத்தின் அறிவிப்பு வீடியோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. இந்த நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகளில் பிசியாக இருக்கும் விஷால் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
7 கோடி மக்கள் பார்க்கும் படத்தை 5 பேர் எப்படி முடிவு செய்யலாம்:
நேற்று சென்னையில் தயாரிப்பாளர் சங்க தேர்தல் நடைப்பெற்றது. மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் நேற்று 2026- 2029-ம் ஆண்டிற்கான நிர்வாகிகள் தேர்விற்காக நடைப்பெற்றது. இதில் தயாரிப்பாளர் GKM தமிழ்குமரன் அணி வெற்றிப்பெற்றது.




Also Read… புஷ்பா 2 படத்திற்காக ஃபிலிம் ஃபேர் விருது வென்ற அல்லு அர்ஜுன் – வைரலாகும் எக்ஸ் பதிவு
இந்த நிலையில் தேர்தல் நடைபெறும் இடத்திற்கு வந்த விஷால் நேற்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அதில் தமிழ்நாட்டில் 7 கோடி மக்கள் பார்க்கும் ஒரு படத்தை சென்சார் மூலம் பார்க்க வேண்டுமா என்பதை 5 பேர் கொண்ட உறுப்பினர்கள் குழு மட்டுமே முடிவு செய்யும் விதத்தை நான் எதிர்க்கிறேன். இந்த நிலை தொடர்ந்தால், 1500 க்கும் மேற்பட்ட நடிகர் சங்க உறுப்பினர்கள் விரைவில் ஜன நாயகனுக்காக மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியம் எதிராக வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என்றும் அவர் அந்தப் பேட்டியில் தெரிவித்துள்ளார். அது தற்போது வைரலாகி வருகின்றது.
Also Read… Amaran: 70வது ஃபிலிம் ஃபேர் அவார்ட்ஸ்.. 8 விருதுகளை வென்ற ‘அமரன் திரைப்படம்’ – என்னென்ன தெரியுமா?