AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சீரியல் ரசிகர்களே தயாரா? விஜய் டிவியில் ஒளிபரப்பு செய்யப்படும் பழைய சீரியல்கள்.. என்னென்ன தெரியுமா?

Vijay TV Re-Telecasts Popular Old Serials: தமிழில் பிரபல தொலைக்காட்சியாக தொடர்களை மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளின் மூலம் ரசிகர்களை கவர்ந்துவருவது விஜய் தொலைக்காட்சி. இந்த தொலைக்காட்சியில் ஏற்கனவே, தினசரியாக பல சீரியல்கள் ஒளிபரப்பாகிவருகிறது. அந்த வகையில் தற்போது பழைய சீரியல் மீண்டும் ஒளிபரப்புவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சீரியல் ரசிகர்களே தயாரா? விஜய் டிவியில் ஒளிபரப்பு செய்யப்படும் பழைய சீரியல்கள்.. என்னென்ன தெரியுமா?
பாக்கியலட்சுமி மற்றும் தென்றல் வந்து என்னை தொடும்Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Updated On: 21 Feb 2026 20:48 PM IST

தமிழ் மக்கள் மத்தியில் சினிமா எந்தளவிற்கு அவர்கள் வாழ்க்கையில் ஒரு அங்கமாக இருக்கிறதோ, அதுபோல சின்னத்திரை தொலைக்காட்சி தொடர்களும் (Television serial) இருக்கிறது. தமிழில் டாக் தொலைக்காட்சிகளாக விஜய் டிவி (Vijay TV) , சன் டிவி (Sun TV), கலர்ஸ் தமிழ் மற்றும் ஜீ தமிழ் (Zee Tamil) போன்ற தொலைக்காட்சிகள் மக்கள் மத்தியில் பிரபலமான ஒன்றாக இருக்கிறது. அந்த வகையில் ரசிகர்கள் தொக்கலைக்காட்சியில் திரைப்படங்களை பார்த்து ரசிப்பதைவிடவும் சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளை கண்டுகளிப்பது வழக்கமே. அந்த விதத்தில் ரியாலிட்டி நிகழ்ச்சியாகில் மற்றும் சீரியல்கள் என மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான தொலைக்காட்சியாக இருப்பது ஸ்டார் விஜய் தொலைக்காட்சிதான். இந்த தொலைக்காட்சியில்தான் பிக் பாஸ் நிகழ்ச்சியானது ஒளிபரப்பப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் மக்களுக்கு எப்போதும் பொழுதுபோக்கிற்கு உதவும் தொலைக்காட்சியாக விஜய் டிவி இருந்துவருகிறது.

இந்நிலையில் இந்த டிவியில் பல சீரியல்கள் வெளியாகிவந்தாலும், பழைய சீரியல்கள் சில பெரும் வரவேற்பை கொடுத்திருந்தது. அந்த விதத்தில் தற்போது விஜய் தொலைக்காட்சியில் பழைய சீரியல்கள் சில மீண்டும் ஒளிபரப்புக்கு செய்யப்படுகிறதாம். அது எந்த சீரியல், எந்த நேரத்தில் ஒளிபரப்பாகிறது என்பது குறித்து பார்க்கலாம்.

இதையும் படிங்க: KH x RK படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு – படத்தில் பட்ஜெட் எவ்வளவு தெரியுமா?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பழைய சீரியல்கள் :

அந்த வகையில் இந்த விஜய் தொலைக்காட்சியில், “பாக்கியலட்சுமி” (Baakiyalakshmi) மற்றும் “தென்றல் வந்து என்னை தொடும்” (Thenral Vandhu Ennai Thodum )) போன்ற சீரியல்கள் மீண்டும் ஒளிபரப்பாகவுள்ளதாம். இந்த பழைய சீரியல்கள் வெளியாகி மக்கள் மத்தியில் ஏற்கனவே மிக பிரம்மாண்ட வரவேற்பை பெற்றிருந்த நிலையில், தற்போது மீண்டும் ஒளிபரப்பாகி தயாராகியுள்ளது.

இதையும் படிங்க: டியூட் பட இயக்குநர் கீர்த்தீஸ்வரன் அடுத்து இயக்க உள்ளது இந்த பிரபல நடிகரா? வைரலாகும் தகவல்

அதன்படி வரும் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 9 மணியளவில் தென்றல் வந்து என்னை தொடும் என்ற சீரியலும், காலை 10 மணிக்கு பாக்கியலட்சுமி சீரியலும் மீண்டும் ஒளிபரப்பப்படவுள்ளதாம். தற்போது இது குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.

விஜய் டிவி மறு ஒளிபரப்பு சீரியல்கள் குறித்து இணையத்தில் வைரலாகும் பதிவு:

 

View this post on Instagram

 

A post shared by Vijay TV Express (@vijaytvexpresss)

தமிழில் ஆதிக்கம் அதிகமாக செலுத்திவரும் தொலைக்காட்சிகளாக சன் டிவி, விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் போன்ற தொலைக்காட்சிகள் இருக்கிறது. அதில் தினசரியாக பல தொடர்கள் ஒளிபரப்பப்பட்டுவரும் நிலையில், தற்போது விஜய் தொலைக்காட்சியில் பழைய சீரியல்கள் மீண்டும் ஒளிபரப்படுகிறது. கிட்டத்தட்ட 1 மணி நேரம் இந்த் பழைய சீரியல்கள் ஒளிபரப்பாகும் என கூறப்பட்டுள்ளது. தற்போது இது சீரியல் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.