AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

வழித்துணையே.. திருமண புகைப்படங்களை பகிர்ந்த பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை!

Roshni Haripriyans Wedding Photos: தமிழில் சின்னத்திரை பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ரோஷ்ணி ஹரிப்ரியன். இவர் பின்னணி இசையமைப்பாளர் கே சுந்தரமூர்த்தி என்பவரை சமீபத்தில் திருமணம் செய்திருந்த நிலையில், அவரின் திருமண புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

Barath Murugan
Barath Murugan | Updated On: 16 Feb 2026 15:59 PM IST
தமிழ் தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் கடந்த 2019- முதல் 2023ம் ஆண்டுவரை வெளியான பாரதி கண்ணம்மா என்ற சீரியலில் நடித்து பிரபலமானவர் ரோஷ்ணி ஹரிப்ரியன். இந்த சீரியலில் கண்ணம்மா வேடத்தில் நடித்த இவர், இதிலிருந்து பாதியில் விலகினார். இதையடுத்து  தமிழ் சினிமாவின் பக்கம் சென்றார்.

1 / 5
ஆரம்பத்தில் குறும்படத்தில் நடித்த ரோஷ்ணி ஹரிப்ரியன், பின் சசிகுமார், சூரி மற்றும் உன்னி முகுந்தனின் நடிப்பில் வெளியான கருடன் என்ற படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். இப்படத்தில் மலையாள நடிகர் உன்னி முகுந்தனுக்கு ஜோடியாக நெகடிவ் வேடத்தில் நடித்து பிரபலமானார். இவர் கதாநாயகியாக அறிமுகமான முதல் படமே சூப்பர் ஹிட் வெற்றியடைந்தது.

2 / 5
அந்த வகையில் பின் சினிமாவில் கதாநாயகியாகவே நடிக்க தொடங்கிய இவர், சீரியலில் நடிக்க ஆர்வம் காட்டவில்லை. மேலும் இவரை லீட் கதாநாயகியாக கொண்டு கடந்த 2025ம் ஆண்டில் வெளியான திரைப்படம்தான் மெட்ராஸ் மேட்ரிமோனி. இந்த படமானது பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றிருந்தது. மேலும் தலைவன் தலைவி படத்தில் விஜய் சேதுபதியின் தங்கையாக நடித்திருந்தார்.

3 / 5
இந்நிலையில் நடிகை ரோஷ்ணி ஹரிப்ரியன் கடந்த 2026 பிப்ரவரி 15ம் தேதியில் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் திருமணம் செய்திருந்தார். இவர் பின்னணி இசையமைப்பாளர் கே சுந்தரமூர்த்தி என்பவரை கரம்பிடித்துள்ளார். இவரின் திருமணம் குறித்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகிவந்த நிலையில், தற்போது அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

4 / 5
நடிகை ரோஷ்ணி ஹரிப்ரியனின் திருமணம் பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் கோலாகலமாக நடைபெற்றிருந்தது. இதில் பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்த கண்மணி, ஃபரினா ஆசாத் மற்றும் காவ்யா அறிவுமணி போன்ற பிரதபலங்களும் கலந்துகொண்டு கொண்டாடியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

5 / 5