AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

மதுரை மாநகர் முழுவதும் 144 தடை உத்தரவு! கார்த்திகை தீபத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அதிரடி!

144 Order In Madurai: நாளை (நவம்பர் 24) தீபம் ஏற்றப்பட உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுரை மாநகர் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நவம்பர் 25-ஆம் தேதி காலை 10 மணி வரை போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பொதுக்கூட்டங்கள் நடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாநகர் முழுவதும் 144 தடை உத்தரவு! கார்த்திகை தீபத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அதிரடி!
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 23 Nov 2026 23:12 PM IST

நவம்பர் 23, 2026: திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் நவம்பர் 24-ஆம் தேதி கார்த்திகை தீபம் ஏற்றப்பட உள்ள நிலையில், சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளைத் தவிர்க்க மதுரை மாநகர் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா உத்தரவிட்டுள்ளார். மேலும், போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பொதுக்கூட்டங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 25-ஆம் தேதி காலை 10 மணி வரை 144 தடை


திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்குச் சொந்தமான மலைப்பகுதியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு உச்சநீதிமன்றம் நவம்பர் 20-ஆம் தேதி இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. இதனைத் தொடர்ந்து, தமிழக அரசு சார்பில் சீராய்வு மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சூழலில், நாளை (நவம்பர் 24) தீபம் ஏற்றப்பட உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுரை மாநகர் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நவம்பர் 25-ஆம் தேதி காலை 10 மணி வரை போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பொதுக்கூட்டங்கள் நடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் முழுவதும் ரெட் சோன்!

இதற்கிடையே, திருப்பரங்குன்றம் மலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் ரெட் சோனாக அறிவிக்கப்பட்டுள்ளன. கோவில் மற்றும் மலைப்பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மலை அடிவாரம் முதல் உச்சி வரை துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க: கேரளாவில் பறவைக் காய்ச்சல் எதிரொலி! கோவை எல்லையில் 12 சோதனைச் சாவடிகளில் தீவிர கண்காணிப்பு!

70-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள்!

அசம்பாவிதங்களைத் தடுக்க மலைப்பாதை மற்றும் தீபத்தூண் அமைந்துள்ள பகுதிகளில் 70-க்கும் மேற்பட்ட புதிய சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதில் நவீன முக அடையாளம் காணும் கேமராக்களும் இடம்பெற்றுள்ளன.

மேலும், தீபத்தூண் அமைந்துள்ள மலை உச்சிப் பகுதியில் அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் இணைந்து பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளன.

மேலும் படிக்க: திருப்பரங்குன்றம் சர்ச்சைக்குரிய கல்தூண் நில அளவீட்டுத் தூண்தான்! உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்..

கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு மதுரையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில், எந்தவிதமான சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளும் ஏற்படாமல் இருக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

Follow Us