Hiphop Adhi: ஹிப்ஹாப் ஆதியின் பர்த்டே ஸ்பெஷல்.. வெளியானது ‘மீசையமுறுக்கு 2’ படத்தின் டீசர்!
Meesaya Murukku 2 Movie Teaser: தமிழில் ஹிப்ஹாப் ஆதி மீசையமுறுக்கு என்ற படத்தை இயக்கி, அதன் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். தற்போது மீசையமுறுக்கு 2 படத்தை இயக்கி, நடித்துவரும் நிலையில், இன்று அவரின் பிறைந்தநாளை முன்னிட்டு டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.
கோலிவுட் சினிமாவில் ஆரம்பத்தில் தனி ஆல்பம் பாடல்களை பாடியும், இசையமைத்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஹிப்ஹாப் ஆதி (Hiphop Adhi). இவர் தமிழ் சினிமாவில் சுந்தர் சி (Sundar C) இயக்கத்தில் வெளியான “ஆம்பள” (Aambala) என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக நுழைந்தார். இந்த படத்தில் விஷால் (Vishal) கதாநாயகனாக நடித்திருந்த நிலையில், சூப்பர் ஹிட் வெற்றியடைதந்தது. இந்த படத்தில் ஹிப்ஹாப் ஆதி இசையமைப்பில் வெளியான பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் வரவேற்பை பெற்றிருந்தது. இதைத் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களிலும் இசையமைப்பாளராக பணியாற்றிவந்தார். பின் நடிப்பின் மீது ஆர்வம் கொண்ட இவர், கதாநாயகனாக நுழைந்த படம்தான் மீசைய முறுக்கு (Meesaya Murukku) . கடந்த 2017ம் ஆண்டில் வெளியான இப்படத்தை ஹிப்ஹாப் ஆதியே இயக்கி, அதில் கதாநாயகனாக நடித்திருந்தார். இப்படமானது இவருக்கு எதிர்பாராத வரவேற்பைக் கொடுத்திருந்தது.
தனது வாழ்க்கையின் கதையை மையமாக கொண்டு இப்படத்தை ஹிப்ஹாப் ஆதி இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து படங்களில் நடித்தும் வந்தார். அந்த வகையில் இன்று 2026 பிப்ரவரி 20ம் தேதியில் தனது 36வது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். இவரின் பிறந்தநாளை முன்னிட்டு மீசையமுறுக்கு 2 (Meesaya Murukku 2) படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.




இதையும் படிங்க: ரத்தம் தெறிக்க.. வெளியானது யாஷின் ‘டாக்சிக்’ படத்தின் அதிரடி டீசர்!
ஹிப்ஹாப் ஆதியின் மீசையமுறுக்கு 2 படத்தின் டீசர் குறித்த பதிவு:
An Underdog’s Legacy Forged Bigger!
From the Streets to the Skies, One Verse at a Time ✒️ 🔥 #MeesayaMurukku2 🎙️ Reveal Teaser
▶️ https://t.co/4e6Sz12HIU#HBDHipHopTamizha@hiphoptamizha #AvniCinemax @benzzmedia #ACSArunKumar @khushsundar #AnanditaSundar @jpg_jeeva… pic.twitter.com/sNMxEOqn1g— Avni Cinemax (@AvniCinemax_) February 20, 2026
இந்த மீசையமுறுக்கு 2 படமானது கானா பாடலை மையமாக கொண்டு தயாராகிவருகிறது. இப்படத்தில் ஹிப்ஹாப் ஆதியுடன் நடிகர்கள் யோகி பாபு, ஹர்ஷத் கான், சைத்ரா ஜே ஆச்சார், பாபா பாஸ்கர் போன்ற பிரபலங்கள் இணைந்து நடித்துவருகின்றனர். தற்போது வெளியான இந்த டீசர் இணையத்தில் வைரலாகிவருகிறது.
மீசையமுறுக்கு 2 :
இந்த மீசையமுறுக்கு 2 படத்தை ஹிப்ஹாப் ஆதி, இயக்கி நடிக்கும் நிலையில், இதை குஷ்பூவின் அவ்னி மோவிஸ் மற்றும் பென்ஸ் மீடியா போன்ற நிறுவனங்கள் இணைந்து தயாரித்துவருகிறது. இந்த படமானது உருவாகுவதாக சில வாரங்களுக்கு முன் ஹிப்ஹாப் ஆதி , தனது மியூசிக் கான்சர்ட் நிகழ்ச்சியில் அறிவித்திருந்தார். இப்படத்தில் ஹிப்ஹாப் ஆதி கதாநாயகனாக நடிக்க, அவருடன் ஹர்ஷத் கான் மிக முக்கியவேடத்தில் நடிப்பதாக அறிவித்திருந்தார்.
இதையும் படிங்க: ‘அவர் அங்கு வருவார் என எனக்கு தெரியாது’ – தனுஷ் குறித்து மிருணாள் தாக்கூர் பேச்சு!
இப்படமும் ஹிப்ஹாப் ஆதியின் நட்பு தொடர்பான கதைக்களத்தில் தயாராகிவருகிறதாம். இந்நிலையில் இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ள நிலையில், ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது. மேலும் இப்படமானது இந்த் 2026ம் ஆண்டு இறுதிக்குள் வெளியிட படக்குழு திட்டமிட்டுவருகிறதாம். இப்படத்திற்கும் ஹிப்ஹாப் ஆதியே இசையமைத்துவரும் நிலையில், இப்படத்தின் பாடல்களும் மக்கள் மத்தியில் வரவேற்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.