AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகாவின் திருமணம் – அட இந்த பிரபலங்கள் கலந்துகொள்கிறார்களா?

Deverakonda And Rashmika Mandanna Wedding: சினிமாவில் காதலர்களாக மக்கள் மத்தியில் பிரபலமாகிவருபவர்கள் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா. இவர்கள் இவருவரும் திருமணம் செய்துகொள்வதாக சமீப காலமாக இணையத்தில் தகவல்கள் வைரலாகிவருகிறது. அதன்படி இவர்களின் திருமணத்தில் எந்தெந்த பிரபலங்கள் கலந்துகொள்கிறார்கள் என்பது குறித்த விவரங்களைப் பார்க்கலாம்.

விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகாவின் திருமணம் – அட இந்த பிரபலங்கள் கலந்துகொள்கிறார்களா?
ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டாImage Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 19 Feb 2026 16:52 PM IST

தெலுங்கு சினிமாவில் சிறந்த நடிகராக இருந்துவருபவர் விஜய் தேவரகொண்டா (Vijay Deverakonda). இவர் சினிமாவில் தொடர்ந்து பிரபல இயக்குநர்களின் கூட்டணியில் படங்களில் நடித்துவருகிறார். அந்த வகையில் இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் கிங்டம் (kingdom). கடந்த 2025ம் ஆண்டில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தது. அதைத் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களிலும் இவர் ஆக்ஷன் நாயகனாக நடித்துவருகிறார். அந்த விதத்தில் இவரும் நடிகை ராஷ்மிகா மந்தனாவும் (Rashmika Mandanna) காதலித்துவருவதாக தகவல்கள் பரவிவந்தது. மேலும் பல்வேறு இடங்களில் இவர்கள் இருவரும், ஒன்றாக வெளியே சென்றுவருவது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களும் வைரலாகிவந்தது. அந்த விதத்தில் இவர்கள் இருவரும் வரும் 2026 பிப்ரவரி 26ம் தேதியில் திருமணம் செய்துகொள்வதாக கூறப்படுகிறது.

மேலும் சமீபத்தில் இவர்கள் திருமண பத்திரிக்கை தொடர்பான புகைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் பரவிவந்தது. அந்த விதத்தில் தற்போது இவர்களின் திருமணத்தில் எந்த பிரபலங்கள் கலந்துகொள்கிறார்களால் என்பது குறித்த விவரங்களும் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: யாஷின் டாக்சிக் பட டீசர் ரிலீஸ் எப்போது?- படக்குழு வெளியிட்ட அப்டேட் இதோ!

விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனாவின் திருமணத்தில் கலந்துகொள்ளும் பிரபலங்கள் :

விஜய் மற்றும் ராஷ்மிகாவின் கடந்த 2025 ஆண்டு இறுதியிலே இருவரும் தங்களின் இல்லத்திலே சிம்பிளாக நிச்சயம் செய்துகொண்டதாக கூறப்பட்டது. அந்த விதத்தில் இவர்களின் திருமணத்திற்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், அதில் எந்தெந்த பிரபலங்கள் கலந்துகொள்கின்றனர் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: யோகி பாபுவின் கெணத்த காணோம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட ஆர்யா

இந்த திருமணத்தில் தொழிலதிபர் முகேஷ் அம்பானி, இயக்குநர்கள் சந்தீப் ரெட்டி வங்கா, சுகுமார், ராகுல் சங்க்ரித்யான் மற்றும் நடிகர்கள் சல்மானை கான், விக்கி கௌஷல் அல்லு அர்ஜுன், நடிகை வர்ஷா, க்ரிதி சனோன் மற்றும் தயாரிப்பாளர் கரண் ஜோகர் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் கலந்துகொள்வதாக கூறப்படுகிறது. மேலும் தமிழ் சினிமாவிலிருந்து சில பிரபலங்கள் கலந்துகொள்வதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

ராஷ்மிகா மந்தனா வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு :

ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டாவின் திருமணம் எங்கே நடக்கிறது:

விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இருவரும், பெற்றோர்கள், பிரபலங்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் வரும் 2026 பிப்ரவரி 26ம் தேதியில் திருமணம் செய்துகொள்ளவுள்ளனர். இவர்களின் திருமணம் உதய்பூரில் உள்ள அரண்மனையில் மிக பிரம்மாண்டமாக நடக்கவுள்ளதாம். இவர்களின் திருமணம் வீடியோவை நெட்பிளிக்ஸ் நிறுவனம் ஸ்ட்ரீம் செய்ய கேட்டிருந்த நிலையில், அதை இந்த ஜோடி வேண்டாம் என மறுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் திருமணம் குறித்தும் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இருவரும் இன்னும் உறுதிசெய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.