Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Vijay Deverakonda: சூர்யாவின் மேல் இருக்கும் அன்பு.. விஜய் தேவரகொண்டா ஓபன் டாக்!

Vijay Deverakonda About Suriya Bonding : தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. இவரின் நடிப்பில் கிங்டம் படமானது ரிலீசிற்கு தயாராகிவருகிறது. இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் நடிகர் சூர்யாவுடனான உறவைப் பற்றி ஓபனாக பேசியுள்ளார். அது குறித்து விவரமாகப் பார்க்கலாம்.

Vijay Deverakonda: சூர்யாவின் மேல் இருக்கும் அன்பு.. விஜய் தேவரகொண்டா ஓபன் டாக்!
விஜய் தேவரகொண்டா மற்றும் சூர்யாImage Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 26 Jul 2025 08:30 AM

நடிகர் விஜய் தேவரகொண்டா (Vijay Deverakonda) தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். இவரின் நடிப்பில் பான் இந்தியா படமாக ரிலீசிற்கு காத்திருக்கும் திரைப்படம் கிங்டம் (Kingdom). இந்த படத்தைத் தெலுங்கு பிரபல இயக்குநர் கௌதம் தின்னனுரி (Gowtam Tinnanuri) இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் முன்னணி நடிகையாக நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் (Bhagyashri Borse) நடித்துள்ளார். இவர்கள் இருவரின் ஜோடி இப்படத்தில் வரவேற்கப்பட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவரின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்திற்கு, தமிழ் இசையமைப்பாளர் அனிருத் (Anirudh) இசையமைத்துள்ளார். இவர் இசையமைப்பில் இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இந்த கிங்டம் படமானது வரும் 2025, ஜூலை 31ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. மேலும் இப்படத்தின் ட்ரெய்லர் வரும் 2025, ஜூலை 26ம் தேதியில் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்திருந்தது.

இந்நிலையில் நேர்காணல் ஒன்றில், பேசிய நடிகர் விஜய் தேவரகொண்டா நடிகர் சூர்யாவுடனான (Suriya) உறவைப் பற்றி விவரமாகப் பேசியுள்ளார். சமீபத்தில் இவர்கள் இருவரும் ரெட்ரோ படத்தின் தெலுங்கு ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நிலையில், அது குறித்தது விஜய் தேவரகொண்டா விவரமாகப் பேசியுள்ளார்.

இதையும் படிங்க : அருமையான பயணத்தில்… வடிவேலு – ஃபகத் பாசிலின் ‘மாரீசன்’ படத்தின் எக்ஸ் விமர்சனம் இதோ!

சூர்யா குறித்து நடிகர் விஜய் தேவரகொண்டா பேசிய விஷயம் :

அந்த நேர்காணலில் தொகுப்பாளர் நடிகர் விஜய் தேவரகொண்டாவிடம், நடிகர் சூர்யாவை பற்றி கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த நடிகர் விஜய் தேவரகொண்டா, ” எனக்கு சூர்யா அண்ணாவை ரொம்ப பிடிக்கும், நான் சிறுவயதில் இருந்தபோதே, அவரை படங்களில் பார்த்திருக்கிறேன், அதுதான் அவருடனான முதல் கனெக்ஷன். மேலும் ரெட்ரோ படத்தின் தெலுங்கு ப்ரோமோஷன் நிகழ்ச்சியின்போது, ஹைதராபாத்தில் அவருடன் கொஞ்ச நேரம் நன்றாக செலவழித்தேன். அவரிடம் நிறைய விஷயங்களைப் பகிர்ந்துகொண்டேன். மேலும் சூர்யா அண்ணா, என்னிடம் அறிவுரை , வழிகாட்டுதல் மற்றும் அவரின் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்” என நடிகர் விஜய் தேவரகொண்டா அந்த நேர்காணலில் ஓபனாக பேசியிருந்தார்.

இதையும் படிங்க : விஜய் ஆண்டனி பிறந்தநாளில் அடுத்த அப்டேட்.. சக்தி திருமகன் 2 பாடல்கள் இதோ!

கிங்டம் படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் பதிவு :

விஜய் தேவரகொண்டா மற்றும் பாக்யஸ்ரீ போர்ஸ் கூட்டணியில் உருவாகியிருக்கும் கிங்டம் படம், காதல், ஆக்ஷ்ன் மற்றும் அதிரடி திரில்லர் கதைக்களத்துடன் உருவாகியுள்ளது. இப்படத்தில் விஜய் தேவரகொண்டா சூரி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவர் இதில் போலீஸ் வேடத்தில் நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது. இப்படமானது வரும் 2025 , ஜூலை 31ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்நிலையில், அதை முன்னிட்டு இப்படத்தின் ட்ரெய்லர் வரும் 2025, ஜூலை 26ம் தேதியில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சி திருப்பதியில் நடைபெறவுள்ளதாகப் படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.