உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள புனிதமான கேதார்நாத் தலத்துக்குச் செல்லும், சுமார் 1,300 ஆண்டுகள் பழமையான நடைபாதை, 13 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திறக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2013 ஆம் ஆண்டு ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கில் பெரிதும் சேதமடைந்த இந்த பாதை, வரும் யாத்திரை காலத்தில் பக்தர்களுக்காக மீண்டும் பயன்பாட்டுக்கு வர உள்ளது. தற்போது பயன்பாட்டில் உள்ள லின்சோலி வழி பாதையை விட இது குறுகியதாகும். குடிநீர் வசதி, கழிப்பறைகள் உள்ளிட்ட சில இறுதிகட்ட பணிகள் மட்டும் மீதமுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.