Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

லெஜெண்ட் சரவணன் நாயகனாக நடிக்கும் 2-வது படத்தில் டைட்டில் லீடர் – வெளியானது க்ளிம்ஸ் வீடியோ

Legend Saravanan Leader Movie Title Glimpse | நடிகர் லெஜெண்ட் சரவணன் நடிப்பில் தற்போது உருவாக உள்ள படம் லீடர். இயக்குநர் ஆர்.எஸ்.செந்தில் குமார் எழுதி படத்தை இயக்க உள்ள நிலையில் இந்தப் படத்தில் டைட்டில் கிளிம்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

லெஜெண்ட் சரவணன் நாயகனாக நடிக்கும் 2-வது படத்தில் டைட்டில் லீடர் – வெளியானது க்ளிம்ஸ் வீடியோ
லீடர்
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 04 Feb 2026 17:04 PM IST

தமிழகத்தில் மிகப்பெரிய தொழிலதிபரான அருள் சரவணன் கடந்த 2022-ம் ஆண்டு முதல் நடிகராக வலம் வருகிறார். இவர் நகைக்கடை தொழில், ஜவுளி தொழில் என பல தொழில்களை செய்து வருகிறார். இந்த நிலையில் தனது 52-வது வயதில் நடிகராக வேண்டும் என்ற ஆசையில் இவர் நடித்து வெளியான படம் தான் லெஜெண்ட் சரவணன். இந்தப் படத்தை இயக்குநர் ஜே.டி.ஜெர்ரி எழுதி இயக்கி இருந்தார். இந்தப் படம் தமிழ் சினிமாவில் கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை மாதம் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி இருந்தது. இதில் அருண் சரவணன் உடன் இணைந்து நடிகர்கள் ஊர்வசி ரவுடேலா,
கீதிகா திவாரி, விவேக், யோகி பாபு, பிரபு, சுமன், நாசர், விஜயகுமார், லதா, குமாரி சச்சு, தம்பி ராமையா, ரோபோ சங்கர், தேவதர்ஷினி, மயில்சாமி, முனிஷ்காந்த், தீபா சங்கர், சிங்கம்புலி, லிவிங்ஸ்டன், மன்சூர் அலி கான், ஹரீஷ் பெராடி, வம்சி கிருஷ்ணா, பெசன்ட் ரவி, ராகுல் தேவ், அமித் திவாரி, செல் முருகன், அஸ்வந்த் அசோக்குமார், மானஸ்வி கொட்டாச்சி, யாஷிகா ஆனந்த், ராய் லக்ஷ்மி, அமுதவாணன், கேபிஒய் யோகி, ஜே.டி.ஜெர்ரி என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர்.

இந்தப் படத்தில் நடிகர் அருள் சரவணன் சயிண்டிஸ்டாக நடித்து இருந்தார். உலகில் மிகப்பெரிய சயிண்டிஸ்டான இவர் டான்சராகவும் வலம் வருகிறார். தொடர்ந்து தனது சொந்த ஊரில் நிரந்தரமாக தங்க நினைக்கும் போது அங்கு அவரது குழந்தைபருவ நண்பர் சக்கரை நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கிறார். அதுகுறித்து அருண் சரவணன் விசாரிக்கையில் இதன் பின்னணியில் ஒரு பெரிய மருத்துவ ஸ்கேம் இருப்பதை கண்டுபிடிக்கிறார். இதனால் சரவணனுக்கு பிரச்ச்னைகள் ஏற்படுகிறது. அதனை அவர் எப்படி சரி செய்கிறார் என்பதே படத்தின் கதை. இந்தப் படம் மக்களிடையே கவலையான விமர்சனத்தைப் பெற்றது. தொடர்ந்து தற்போது 2026-ம் ஆண்டு இவர் நடிக்கும் இரண்டாவது படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அருள் சரவணனின் 2-வது படத்தின் டைட்டில் லீடர்:

இந்த நிலையில் அருண் சரவணனின் 2-வது படம் குறித்த அறிவிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. அதன்படி இன்று அருள் சரவணின் இரண்டாவது படத்திற்கு லீடர் என்று பெர்யர் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான க்ளிம்ஸ் வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

Also Read… ஜனநாயகன் படம் வெளியாவதில் மேலும் ஒரு சிக்கல்? படம் வெளியாகுமா?

அருள் சரவணன் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… திரையரங்குகளில் வெளியாகி 15 ஆண்டுகளை நிறைவு செய்தது சேரனின் யுத்தம் செய் படம்!