நேர்மைக்கு மரியாதை செய்த ரஜினிகாந்த்.. 45 சவரனை ஒப்படைத்த தூய்மை பணியாளருக்கு தங்கச் சங்கிலி பரிசு
Rajinikanth Gifts A Gold Chain To Frontline Worker: சினிமாவில் முன்னணி நாயகனாகவும், சமூக ஆர்வலராகவும் இருந்து வருபவர் ரஜினிகாந்த். இவர் சமீபத்தில் மக்களால் பாராட்டப்பட்ட, தூய்மை பணியாளர் பெண் பத்மா என்பவரை நேரில் அழைத்து, தங்கச் சங்கிலியை பரிசாக கொடுத்துள்ளார். இது குறித்து விவரமாக பார்க்கலாம்.
தென்னிந்திய சினிமாவில் உச்ச நாயகனாக இருந்துவருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Superstar Rajinikanth). இவர் தமிழ் சினிமாவில் தொடர்ந்து மிக பிரம்மாண்ட பட்ஜெட் திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்துவருகிறார். இவர் சினிமாவில் கிட்டத்தட்ட 50 வருடத்தை கடந்தும் தற்போது வரை படத்தில் லீட் கதாநாயகனாகவே நடித்துவருகிறார். இவரின் நடிப்பில் இறுதியாக கூலி (coolie) என்ற படமானது வெளியாகியிருந்தது. இப்படத்தை அடுத்ததாக இயக்குநர் நெல்சன் திலீப்குமாரின் (Nelson Dilipkumar) இயக்கத்தில் ஜெயிலர் 2 (Jailer 2) என்ற திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துவந்தார். இப்படத்தின் ஷூட்டிங் கடந்த 2025 மார்ச் மாதத்தில் தொடங்கிய நிலையில், சமீபத்தில் ரஜினிகாந்த் தனது கதாபாத்திரத்திற்கான ஷூட்டிங்கை முழுவதுமாக முடித்துவிட்டாராம். அந்த விதத்தில் தற்போது ரஜினிகாந்த் பல்வேறு சமூக செயல்கள் மற்றும் தமிழக அரசின் சாரிப்பில் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு வருகிறார்.
அந்த விதத்தில் சமீபத்தில் தூய்மை பணியாளர் பெண் (Cleaning lady) ஒருவர் 45 சவரன் நகைகளை மீட்டு, அதை அதன் உரிமையாளரிடம் கொண்டு சேர்த்து தொடர்பான தகவல்கள் மக்கள் மத்தியில் பாராட்டப்பட்டிருந்தது. இந்நிலையில் அந்த தூய்மை பணியாளரான பத்மா என்பவரை ரஜினிகாந்த் நேரில் அழைத்து, தங்கச் சங்கிலியைப் பரிசாக அளித்துள்ளார்.




இதையும் படிங்க: நேரடியாக ஓடிடியில் வெளியாகும் ஜி.வி.பிரகாஷின் லக்கி படம்.. எப்போது? எதில் பார்க்கலாம்?
தூய்மை பணியாளருக்கு ரஜினிகாந்த் பரிசளித்தது குறித்த பதிவு :
In a heartwarming gesture, #SuperstarRajinikanth honours frontline worker #Padma with a gold chain, recognising her as a true good Samaritan. 🌟#ThalaivarNirantharam #ThalaivarForLife @rajinikanth @ash_rajinikanth @soundaryaarajni @ParasRiazAhmed1 @V4umedia_ pic.twitter.com/OzXa1Pn2Sg
— RIAZ K AHMED (@RIAZtheboss) February 3, 2026
நடிகர் ரஜினிகாந்த், தூய்மை பணியாளரான பத்மா என்ற பெண்ணை தனது இல்லத்திற்கு தனிப்பட்ட முறையில் அழைத்துள்ளார். நேரில் அழைத்து பாராட்டி அவர் அவருக்கு, கிட்டத்தட்ட ரூ 1.5 லட்சத்திற்கும் அதிகம் மதிப்புள்ள தங்கச் சங்கிலியை பரிசாக அளித்துள்ளார். தங்கம் விற்கும் விலைக்கு அந்த பெண் செய்த சொல்லை தமிழக மக்கள் மத்தியில் பாராட்டப்பட்டுவருகிறது. மேலும் இந்த அருமையான செயலை செய்த ரஜினிகாந்தை பல்வேறு பிரபலங்களும் பாராட்டிவருகின்றனர்.
தூய்மை பணியாளர் பத்மா 45 சவரனை ஒப்படைத்த சம்பவம்:
துப்புரவுத் தொழிலாளி பத்மா தனது பணியின் போது கண்டெடுத்த 45 சவரன் தங்க நகைகளை திருப்பி அளித்ததைத் தொடர்ந்து, அவரது நேர்மையை அங்கீகரிக்கும் விதத்தில் தங்கச் சங்கிலியை ரஜினிகாந்த் பரிசளித்துள்ளார். சென்னை டி நகர் பகுதியில் பணிபுரியும் பத்மா, இந்த மாத தொடக்கத்தில் தெருவில் தங்க நகைகைகள் இருக்கும் ஒரு பையைக் கண்டெடுத்துள்ளார். தங்கம் விற்கும் விலையில் அந்த இடத்தில் இருக்கும் யாரானாலும் அதன்மீது ஆசை பட்டிருப்பார்கள்.
இதையும் படிங்க: விரைவில் 4K தரத்தில் ரீ ரிலீஸாகும் சத்யராஜின் சூப்பர் ஹிட் படமான அமைதிப்படை
ஆனால் துளியும் ஆசைப்படாத தூய்மை பணியாளாரான பத்மா, காவல்துறையிடம் அந்த 45 சவரன் நகைவை ஒப்படைத்துள்ளர். மேலும் அது சரியான உரிமையாளரிடம் பாதுகாப்பாக திரும்புவதை உறுதி செய்திருக்கிறார். இந்நிலையில்தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த இவருக்கு, தனது கைகளால் தங்கச் சங்கிலியை பரிசாக கொடுத்து, அவரின் நேர்மையை பாராட்டியிருக்கிறார்.