AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

விரைவில் 4K தரத்தில் ரீ ரிலீஸாகும் சத்யராஜின் சூப்பர் ஹிட் படமான அமைதிப்படை

Amaidhipadai Movie Re-Release Update: தமிழ் சினிமாவில் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து படங்கள் ரீ ரிலீஸாகிறது. இந்த நிலையில் நடிகர் சத்யராஜ் நடிப்பில் முன்னதாக வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த அமைதிப்படை படம் 4கே வடிவில் ரீ ரிலீஸாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

விரைவில் 4K தரத்தில் ரீ ரிலீஸாகும் சத்யராஜின் சூப்பர் ஹிட் படமான அமைதிப்படை
அமைதிப்படை
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 02 Feb 2026 19:54 PM IST

தமிழ் சினிமா மட்டும் இன்றி தென்னிந்திய சினிமா முழுவதும் தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்கள் மற்றும் சூப்பர் ஹிட் அடித்தப் படங்கள் அனைத்தும் தொடர்ந்து திரையரங்குகளில் ரீ ரிலீஸாகிறது. மேலும் புதிதாக வெளியாகும் படங்கள் தொடர்ந்து மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெறுவது போல ரீ ரிலீஸாகும் படங்களும் தொடர்ந்து மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் வசூலிலும் நல்ல வரவேற்பைப் பெற்று வருவதால் படங்களை ரீ ரிலீஸ் செய்யும் படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தமிழ் சினிமாவைப் பொருத்துவரை தற்போது அதிக அளவில் படங்கள் தொடர்ந்து ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றது. அந்த வகையில் தற்போது நடிகர் சத்யராஜ் நடிப்பில் முன்னதாக வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்ற அமைதிப்படை படம் ரீ ரிலீஸாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதன்படி கடந்த 1994-ம் ஆண்டு ஜனவரி மாதம் 13-ம் தேதி தமிழ் சினிமாவில் வெளியான படம் அமைதிப் படை. இந்தப் படத்தை இயக்குநரும் நடிகருமான மணிவண்ணன் எழுதி இயக்கி இருந்தார். இதில் நடிகர் சத்யராஜ் இரட்டை வேடத்தில் நடித்து இருந்த நிலையில் நடிகர்கள் ரஞ்சிதா, கஸ்தூரி, சுஜாதா, ஆர்.சுந்தர்ராஜன், எஸ்.எஸ்.சந்திரன், மலேசியா வாசுதேவன், காந்திமதி, சி.ஆர்.சரஸ்வதி, பேபி ஆர்த்தி, மதுரை வாசு, மணிவண்ணன், மீசை முருகேசன், வெள்ளை சுப்பையா, சீமான் என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். மேலும் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Also Read… Legend Saravana: லெஜெண்ட் சரவணாவின் 2வது படம்.. வெளியானது முக்கிய அறிவிப்பு!

விரைவில் 4K தரத்தில் ரீ ரிலீஸாகும் அமைதிப்படை படம்:

பொலிட்டிகள் சட்டையர் பாணியில் வெளியான இந்தப் படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகி 32 ஆண்டுகளைக் கடந்துள்ளது. ஆனாலும் தற்போது நடைபெரும் அரசியல் நிகழ்வுகளை இந்தப் படத்தில் உள்ள காட்சிகளை மேற்கோள் காட்டி கிண்டலடிக்கும் அளவிற்கு பிரபலமான படமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த அமைதிப்படை படம் ரீ ரிலீஸாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் விரைவில் படத்தின் ரீ ரிலீஸ் தேதியை படக்குழு அறிவிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

Also Read… ஓடிடியில் வெளியாகி உள்ள நிவின் பாலியின் சர்வம் மாயா படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ

Follow Us