நாளை சிம்புவின் பிறந்த நாளில் வெளியாகும் அரசன் பட அப்டேட் – வைரலாகும் தகவல்
Arasan Movie Update: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிலம்பரசன். இவரது நடிப்பில் தற்போது அரசன் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. இந்த நிலையில் நாளை சிலம்பரசனின் பிறந்த நாளை முன்னிட்டு அப்டேட் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிலம்பரசன். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. தமிழ் சினிமாவில் கைக்குழந்தையாக அறிமுகம் ஆன சிம்பு தற்போது நாயகனாக கலக்கி வருகிறார். இயக்குநரும் நடிகருமான டி.ராஜேந்திரனின் மகனாக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆன சிலம்பரசன் தொடர்ந்து பாடலாசிரியர், பாடகர் என பன்முகத்தன்மை கொண்டவராக வலம் வருகிறார். இவரது நடிப்பில் அடுத்தடுத்து உருவாக உள்ள படம் குறித்த அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் நடிகர் சிலம்பரசன் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான தக் லைஃப் படத்தில் அவரது நடிப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
தக் லைஃப் படத்தை தொடர்ந்து நடிகர் சிலம்பரசன் எந்த இயக்குநர் படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் அவர் வெற்றிமாறன் உடன் கூட்டணி வைத்தது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து இந்தப் படத்தின் அறிவிப்பு வீடியோ வெளியான போது ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கி அடுத்தடுத்து அப்டேட்கள் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.




நாளை சிம்புவின் பிறந்த நாளில் வெளியாகும் அரசன் பட அப்டேட்:
இந்த நிலையில் நடிகர் சிம்புவின் நடிப்பில் உருவாகி வரும் அரசன் படம் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து பிப்ரவரி மாதம் 2-ம் வாரத்தில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் நடிகர் சிம்புவிற்கு நாளை 3-ம் தேதி பிப்ரவரி மாதம் 2026-ம் ஆண்டு பிறந்த நாள் கொண்டாட உள்ளார். அதன்படி இந்த பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அவரது நடிப்பில் தற்போது உருவாகி வரும் அரசன் படத்தில் இருந்து அப்டேட் வெளியாக உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளது. இது சிலம்பரசனின் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read… இணையத்தில் கவனம் பெறும் பாவனா – ரஹ்மானின் அனோமி படத்தின் ட்ரெய்லர்
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
#Arasan Special Update loading 🥁 #SilambarasanTR Birthday Special 💥 pic.twitter.com/P83zgWy8Kx
— Movie Tamil (@_MovieTamil) February 2, 2026
Also Read… Karna: ‘சூர்யாவின் கர்ணா பட திட்டமும் விரைவில் நிறைவேறும்’ – இயக்குநர் ராகேஷ் ஓம்பிரகாஷ்!