AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இணையத்தில் கவனம் பெறும் பாவனா – ரஹ்மானின் அனோமி படத்தின் ட்ரெய்லர்

Anomie The Equation Of Death Official Trailer: நடிகர்கள் பாவனா மற்றும் ரஹ்மான் முன்னணி வேடத்தில் நடித்துள்ள படம் அனோமி. இந்தப் படம் இன்னும் சில நாட்களில் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் படத்தின் ட்ரெய்லரைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

இணையத்தில் கவனம் பெறும் பாவனா – ரஹ்மானின் அனோமி படத்தின் ட்ரெய்லர்
அனோமிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 01 Feb 2026 18:01 PM IST

மலையாள சினிமாவில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து மலையாள சினிமா ரசிகர்களிடையே மட்டும் இன்றி தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையேயும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. அதன்படி மலையாள சினிமாவில் முன்னணி நாயகன்களின் படங்கள் மட்டும் இன்றி சின்ன சின்ன வேடங்களில் நடித்து  வெளியாகும் படங்களும் தொடர்ந்து வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் நாயகிகளை மையமாக வைத்து வெளியாகும் படங்களும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் மலையாள சினிமாவில் நாயகியாக அறிமுகம் ஆகி தொடர்ந்து தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை பாவனா. இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் நடிகை பாவனா நடிப்பில் உருவாகி அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் அனோமி தி ஈக்கிவேஷனாஃப் டெத்.

இந்தப் படத்தை இயக்குநர் ரியாஸ் மாரத் எழுதி இயக்கி உள்ளார். சயின்ஸ் ஃபிக்‌ஷன் த்ரில்லர் படமாக உருவாகி உள்ள இந்தப் படத்தில் நடிகர்கள் பாவனா மற்றும் ரஹ்மான் இருவரும் முன்னணி வேடத்தில் நடித்துள்ள நிலையில் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் ஷெபின் பென்சன், விஷ்ணு அகஸ்தியா, பினு பப்பு, அர்ஜுன் லால், த்ரிஷ்யா ரெகுநாத் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்தப் படம் வருகின்ற பிப்ரவரி மாதம் 6-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் படத்தின் ட்ரெய்லரைப் படக்குழு வெளியிட்டுள்ளது.

இணையத்தில் கவனம் பெறும் அனோமி படத்தின் ட்ரெய்லர்:

இந்தப் படத்தின் ட்ரெய்லரைப் பார்க்கும் போதே இது நிச்சயமாக ஒரு டார்க் கதையை மையமாக வைத்து உருவாகியுள்ளது என்பது தெரிகிறது. மேலும் இதில் தொலைந்துபோன தம்பியை தேடும் கதாப்பாத்திரத்தில் நடிகை பாவனா நடித்துள்ள நிலையில் மிகவும் அக்ரசிவான கதாப்பாத்திரத்தில் நடித்து உள்ளார். இதில் பாவனாவின் தம்பியை சுற்றியே கதை உள்ளது ட்ரெய்லரைப் பார்க்கும் போது தெரிகிறது. மேலும் இது எப்படி இருக்கும் என்பது படம் வெளியான பிறகே தெரியவரும்.

Also Read… இந்த வீக் என்டில் ஓடிடியில் ஜாலியா ஒரு படம் பார்க்கனுமா? அப்போ இந்த அலா வைகுந்தபுரமுலூ பாருங்க

அனோமி படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… இதுதான் ட்ரான்சிஸன்.. பூக்கியாக மாறிய AK – வைரலாகும் வீடியோ!

Follow Us