Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பர்த்டே பாய் டொவினோ தாமஸின் நடிப்பில் இந்த தல்லுமாலா படத்தை மிஸ் செய்யாதீர்கள்!

Tovino Thomas Thallumaala Movie: மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் டொவினோ தாமஸ். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் முன்னதாக வெளியான தல்லுமாலா படத்தினை எந்த ஓடிடியில் பார்க்கலாம் என்பது குறித்து பார்ப்போம்.

பர்த்டே பாய் டொவினோ தாமஸின் நடிப்பில் இந்த தல்லுமாலா படத்தை மிஸ் செய்யாதீர்கள்!
தல்லுமாலா
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 21 Jan 2026 22:23 PM IST

மலையாள சினிமாவில் கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் தல்லுமாலா. இந்தப் படத்தை இயக்குநர் காலித் ரஹ்மான் இயக்கி இருந்தார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் டொவினோ தாமஸ் நாயகனாக நடித்து இருந்த நிலையில் நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நாயகியாக நடித்து இருந்தார். இவருடன் இணைந்து நடிகர்கள் ஷைன் டாம் சாக்கோ, லுக்மான் அவரன், சுவாதி தாஸ் பிரபு, அத்ரி ஜோ, ஆஸ்டின் டான், பினு பப்பு, கோகுலன், ஜானி ஆண்டனி, செம்பன் வினோத் ஜோஸ், நீனா குருப், அசிம் ஜமால், ஷஃபி கொல்லம், நௌஷாத் அலி, பானுமதி பையனூர், டி. ஜேம்ஸ் சான் குமார், டி. ஜேம்ஸ் சான் எலியா, டி. ஜேம்ஸ் சான் எலியா. சலீம், மஷார் ஹம்சா, ஆன் சலீம், நஸ்லின் சலீம், உன்னி ராஜா, வி.பி. காலித், தியா ரோஹின் செபாஸ்டியன், தன்வி ராம், அசில், முகமது எரவத்தூர், ஆனந்த் பால், பாலன் பரக்கல், பாபு அன்னூர், குலாம் அலி, ஜலீல், சலீம் குமார், விஷ்ணு விஜய் என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர்.

மேலும் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் விஷ்ணு விஜய் இசையமைத்து இருந்த நிலையில் படத்தைப் போல பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை எந்த ஓடிடியில் பார்க்கலாம் என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.

தல்லுமாலா படத்தை எந்த ஓடிடியில் பார்க்கலாம்?

நடிகர் டொவினோ தாமஸ் வசீம் என்ற கதாப்பாத்திரத்தில் தல்லுமாலா படத்தில் நடித்து இருந்தார். இதில் டொவினோ தாமஸ் யாருடன் எல்லாம் சண்டைப் போடுகிறாரோ அவர்களுடன் எல்லாம் நட்பாகி ஒன்றாக சுத்தி வருகிறார். துபாயில் வேலை செய்யும் குடும்பத்தில் பிறந்த இவர்களின் ஆடை மற்றும் பழக்கவழங்கள் அனைத்தும் மற்ற இஸ்லாமியர்களிடையே வேறுபட்டு காணப்படும்.

Also Read… பிரபல மலையாள இயக்குநரை புகழ்ந்து பேசிய இயக்குநர் சுதா கொங்கரா – வைரலாகும் வீடியோ!

இப்படி இருக்கும் சூழலில் யூடியூபரான பீபாத்து பீவி என்ற கதாப்பாத்திரத்தில் கல்யாணி பிரியதர்ஷன் நடித்து இருந்தார். இவர்கள் இருவரும் சந்தித்த போது பழக்கம் ஏற்படுகின்றது. அதனைத் தொடர்ந்து இவர்கள் இருவரும் காதலித்து அது திருமணம் வரை சென்று ஒரு சண்டையில் அந்த திருமணம் நின்று போகிறது. பின்பு அந்த திருமணம் நடந்ததா இல்லையா என்பதே படத்தின் கதை. இது தற்போது நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

Also Read… டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் அந்த கேரக்டர் நான் நடிக்க வேண்டியது – கென் கருணாஸ் ஓபன் டாக்