பிரபல மலையாள இயக்குநரை புகழ்ந்து பேசிய இயக்குநர் சுதா கொங்கரா – வைரலாகும் வீடியோ!
Director Sudha Kongara: தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் சுதா கொங்கரா. இவரது இயக்கத்தில் சமீபத்தில் வெளியான பராசக்தி படம் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வரும் நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் சுதா கொங்கரா. இவர் தமிழ் சினிமாவில் இயக்கிய படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் சமீபத்தில் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான படம் பராசக்தி. பீரியட் ட்ராமாவாக உருவான இந்தப் படம் 60களின் தமிழகத்தில் நடந்த இந்தி எதிர்ப்பு கொள்கையை மையமாக வைத்து உருவாகி உள்ளது. இந்தப் படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 10-ம் தேதி ஜனவரி மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. மேலும் இந்தப் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்து இருந்த நிலையில் நடிகர் ரவி மோகன் வில்லனாக கலக்கியுள்ளார். இந்தப் படத்தைப் பார்த்த மக்கள் ரவி மோகனின் நடிப்பை வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.
தொடர்ந்து இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து இருந்த நிலையில் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்தப் படம் ஜிவி பிரகாஷ் இசையில் வெளியான 100-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் சமீபத்தில் இயக்குநர் சுதா கொங்கரா அளித்தப் பேட்டி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. அந்தப் பேட்டியில் மலையாள சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வரும் அஞ்சலி மேனன் குறித்து பேசியுள்ளார்.




அஞ்சலி மேனன் எனக்காக ஒரு காதல் கதையை எழுதி வருகிறார்:
அந்தப் பேட்டியில் இயக்குநர் சுதா கொங்கரா பேசியதாவது, மலையாள சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வரும் இயக்குநர் அஞ்சலி மேனன் எனக்காக ஒரு அழகான காதல் கதையை எழுதி வருகிறார். அது ‘உஸ்தாத் ஹோட்டல்’ மற்றும் ‘பெங்களூர் டேஸ்’ பாணியிலான ஒரு கதை. ‘பெங்களூர் டேஸ்’ என் விருப்பமான திரைப்படம். அவர் அந்தக் கதையை எழுதுகிறார், நான் அந்தப் படத்தை இயக்கப் போகிறேன் என்று தெரிவித்துள்ளார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறார்.
Also Read… மங்காத்தா படத்தில் இருந்து BTS புகைப்படங்களை வெளியிட்ட வெங்கட் பிரபு
இணையத்தில் வைரலாகும் சுதா கொங்கரா பேச்சு:
#SudhaKongara Recent
– Anjali Menon is writing a beautiful love story for me.
– It is a story in the style of Ustad Hotel and Bangalore Days. Bangalore Days is my favourite film.
– She is writing it, and I am going to direct the film.#ParaSakthipic.twitter.com/AzU6rWI9Xo— Movie Tamil (@_MovieTamil) January 20, 2026
Also Read… தனுஷின் கர படத்தில் மமிதா பைஜூவின் நடிப்பு இப்படித்தான் இருக்கும் – இயக்குநர் விக்னேஷ் ராஜா பேச்சு!