Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

நாயகன்கள் அப்படி செய்யும்போது வருத்தமாக உள்ளது – நடிகை பாவனா ஓபன் டாக்

Actress Bhavana: மலையாள சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆகி பின்பு தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் என தொடர்ந்து தென்னிந்திய மொழிகளில் பலப் படங்களில் நடித்தவர் நடிகை பாவனா. இவர் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்று தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

நாயகன்கள் அப்படி செய்யும்போது வருத்தமாக உள்ளது – நடிகை பாவனா ஓபன் டாக்
நடிகை பாவனாImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 19 Jan 2026 21:49 PM IST

மலையாள சினிமாவில் கடந்த 2002-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் நம்மல். இந்தப் படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்ததன் மூலம் நடிகையாக அறிமுகம் ஆனார் நடிகை பாவனா. அதனைத் தொடர்ந்து கடந்த 2005-ம் ஆண்டு வரை மலையாள சினிமாவில் பலப் படங்களில் நடித்து வந்த நடிகை பாவனா கடந்த 2006-ம் ஆண்டு முதல் தமிழ் சினிமாவில் நடிக்கத் தொடங்கினார். அதன்படி நடிகை பாவனா கடந்த 2006-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியான சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் நாயகியாக அறிமுகம் ஆனார். இவர் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆன முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். அதனைத் தொடர்ந்து நடிகை பாவனா தமிழ் சினிமாவில் கிழக்கு கடற்கரை சாலை, வெயில், தீபாவளி, கூடல் நகர், ஆர்யா, ராமேஸ்வரம், வாழ்த்துகள், ஜெயம்கொண்டான், அசல் என பலப் படங்களில் நடித்துள்ளார்.

அதன்படி தமிழ் சினிமாவில் நடிகை பாவனா நடிப்பில் வெளியான அனைத்துப் படங்களும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இது மட்டும் இன்றி மற்ற தென்னிந்திய மொழிகளிலும் நடிகை பாவனா தொடர்ந்து நடித்து வருகிறார். அதில் குறிப்பாக கன்னட மொழியில் அதிகப் படங்களில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகை பாவனா சமீபத்தில் அளித்தப் பேட்டி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நாயகன்கள் அப்படி செய்யும்போது வருத்தமாக உள்ளது:

அதில் பாவனா பேசியதாவது, கோவிட் வருவதற்கு முன்பு என் பெரும்பாலான படங்கள் பெரும் வெற்றி பெற்றன. என் முந்தைய படம் வெற்றி பெற்ற ஒரே காரணத்திற்காக என்னால் என் சம்பளத்தை உயர்த்திக்கொள்ள முடியாது, ஏனென்றால் நான் அந்தப் படத்தின் ஒரு பகுதி மட்டுமே. அந்தப் படம் என்னால் மட்டும் வெற்றி பெறவில்லை.

சில சமயங்களில், கதாநாயகர்கள் ஒன்று அல்லது இரண்டு படங்கள் வெற்றி பெற்ற உடனேயே தங்கள் சம்பளத்தை உயர்த்தி, கோடிக்கணக்கில் கேட்பதைப் பார்க்கும்போது எனக்கு வருத்தமாக இருக்கிறது. நானும் கேட்கிறேன், சில சமயங்களில் கெஞ்சி, மன்றாடிக் கூட பேரம் பேசுவேன். ஏனென்றால், கதாநாயகிகளை எளிதில் மாற்றிவிட முடியும்.

சில சமயங்களில், ‘திருமணத்திற்குப் பிறகு நடிப்பீர்களா?’ என்று கேட்கிறார்கள். திருமணத்திற்குப் பிறகு கதாநாயகிகள் நடிக்க முடியாது என்ற இந்த எண்ணத்தை யார் உருவாக்கினார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. என் கணவர் எனக்கு அந்த சுதந்திரத்தைக் கொடுத்திருக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.

Also Read… ஆக்‌ஷன் த்ரில்லர் நிறைந்த இந்த அய்யப்பனும் கோஷியும் படத்தை எந்த ஓடிடியில் பார்க்கலாம்? அப்டேட் இதோ

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… My Lord: சசிகுமாரின் ‘மை லார்ட்’ படத்தின் ட்ரெய்லர் எப்போது வெளியாகிறது? அறிவிப்பு இதோ!