Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Theri Re-Release: தெறி படத்தின் ரீ-ரிலீஸ் தேதியை ஒத்திவைத்த தயாரிப்பாளர்.. கடும் கோபத்தில் ரசிகர்கள்!

Theri Re-release Postponed Again: தளபதி விஜய்யின் நடிப்பில் வெளியாகி 10 வருடங்களை எட்டிய திரைப்படம் தெறி. இதன் காரணமாக இந்த 2026ம் ஆண்டு ஜனவரி 23ல் இப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்படுவதாக அறிவித்து ட்ரெய்லர் வெளியான நிலையில், இதன் ரீ-ரிலீஸ் தேதியை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு மீண்டும் ஒத்திவைத்துள்ளார். இதற்கான காரணம் என்ன என்பது குறித்து விளக்கமாக பார்க்கலாம்.

Theri Re-Release: தெறி படத்தின் ரீ-ரிலீஸ் தேதியை ஒத்திவைத்த தயாரிப்பாளர்.. கடும் கோபத்தில் ரசிகர்கள்!
தெறிImage Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 19 Jan 2026 11:50 AM IST

இயக்குநர் அட்லீ (Atlee) மற்றும் தளபதி விஜய்யின் (Thalapathy Vijay) கூட்டணியில் முதல் திரைப்படமாக உருவாகியிருந்த படம் தெறி (Theri). இந்த படமானது கடந்த 2016ம் ஆண்டி ஏப்ரல் 14ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகியிருந்தது. இப்படத்தில் தளபதி விஜய் விஜய் குமார் ஐ.பி.எஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார். மேலும் இதில் அவருக்கு ஜோடியாக நடிகைகள் சமந்தா (Samantha) மற்றும் எமி ஜாக்சன் (Amy Jackson) போன்ற பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். இப்படமானது அவருக்கு சிறப்பான வரவேற்பை கொடுத்திருந்தது. 10 வருடங்களுக்கு முன்பே சுமார் ரூ 150 கோடிகளுக்கு மேல் இப்படம் வசூல் செய்து சாதனைப் படைத்திருந்தது. இந்த படமானது தளபதி விஜய்க்கு தமிழ் சினிமாவில் சூப்பர் ஹிட்டான திரைப்படம் என்றே கூறலாம். இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் (GV. Prakash Kumar) இசையமைக்க, வீ க்ரியேஷன் நிறுவனத்தின் கீழ் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு (Kalaippuli S Thanu) தயாரித்திருந்தார்.

இந்த 2026ம் ஆண்டுடன் இப்படம் வெளியாகி 10 ஆண்டுகளை எட்டிய நிலையில், வரும் 2026 ஜனவரி 23ம் தேதியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து இப்படத்தின் ட்ரெய்லரும் வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில் தராது இப்படத்தின் ரீ-ரிலீஸ் தேதி மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தயாரிப்பாளர் அறிவித்துள்ளார்.

இதையும் படிங்க: பிக் பாஸ் சீசன் 9 தமிழ் நிகழ்ச்சியின் டைட்டிலை தட்டிச்சென்ற திவ்யா கணேஷ்.. ஹேப்பியில் ரசிகர்கள்!

தெறி பட ரீ-ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்ட காரணம் என்ன :

ஏற்கனவே தெறி திரைப்படம் கடந்த 2026 ஜனவரி 15ம் தேதியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரீ-ரிலீஸ் செய்யப்பட்டிருந்தது. இதை அடுத்தாக புது படங்கள் வரும் விதத்தில் அந்த படத்தின் வசூல் படகிக்கக்கூடாது என்ற நிலையில், பின் 2026 ஜனவரி 23ல் அஜித் குமாரின் மங்காத்தா-படத்துடன் ரீ-ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் திரௌபதி 2 படமும் 2025 ஜனவரி 23ம் தேதியில் வெளியாகவுள்ள நிலையில், அதன் இயக்குனர் மோகன் ஜி தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணுவிற்கு கோரிக்கை வைத்துள்ளார்.

இதையும் படிங்க: ஜனநாயகனுக்கு நடந்தது எந்தப் படத்துக்கும் நடக்கக் கூடாது – சுதா கொங்கரா பேச்சு!

வரவிருக்கும் புது படங்களை ஆதரிக்கவேண்டும் என்று, தளபதி விஜய்யின் தெறி படத்தின் ரீ-ரிலீஸை ஒத்திவைக்கவேண்டும் என்றும் வேண்டுகோள் வைத்துள்ளார். இதன் காரணமாகவே கலைப்புலி எஸ் தாணு தெறி திரைப்படத்தன் ரீ-ரிலீஸ் தேதியி ஒத்திவைப்பதாகவும், இன்று 2026 ஜனவரி 19ம் தேதியில் புது ரிலீஸ் தேதியை அறிவிப்பதாகவும் கூறியுள்ளார்.

தெறி திரைப்பட ரீ-ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு குறித்து தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு வெளியிட்ட எக்ஸ் பதிவு :