நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி தேதி.. மிஸ் பண்ணிடாதீங்க!
Last Date To Apply NEET Exam | மருத்துவ மாணவர் சேர்க்கைக்காக ஒவ்வொரு கல்வி ஆண்டும் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. அந்த வகையில், இன்று நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி என தேசிய தேர்வு முகமை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
டெல்லி, மார்ச் 11 : எம்பிபிஎஸ் (MBBS – Bachelor Of Medicine Bachelor Of Surgery), பிடிஎஸ் (BDS – Bachelor of Dental Surgery) உள்ளிட்ட படிப்புகளில் சேருவரதற்கான நீட் (NEET – National Entrance Eligibility Test) தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் இன்றுடன் (மார்ச் 11, 2026) முடிவடைகிறது. ஏற்கனவே இரண்டு நாட்கள் கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ள நிலையில், இன்றுடன் அது முடிவடைகிறது. இந்த தேதியை நீட்டிப்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகாமல் உள்ள நிலையில், இன்றைக்குள் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டியது கட்டாயமாக உள்ளது.
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் உள்ளிட்ட படிப்புகளில் இணைந்து படிக்க வேண்டும் என்றால் நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயமாக உள்ளது. மாணவர்கள் நீட் தேர்வில் பெறும் மதிப்பெண்களை அடிப்படையாக கொண்டு அவர்களுக்கு மருத்து படிப்புக்கான வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், 2026 மற்றும் 2027 ஆம் கல்வி ஆண்டுக்கான மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு குறித்து பிப்ரவரி 07, 2026 அன்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதையும் படிங்க : ஆபாசா வீடியோவை வைத்து முதியவரை ஏமாற்றி பணம் பறித்த பெண்.. ஷாக் சம்பவம்!




மார்ச் 11, 2026 வரை நீட்டிக்கப்பட்ட நீட் விண்ணப்பம்
அதனை தொடர்ந்து பிப்ரவரி 08, 2026 முதல் விண்ணப்ப பதிவு தொடங்கியது. முன்னதாக நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 08, 2026 கடைசி தேதியாக இருந்தது. ஆனால், மாணவ, மாணவிகள் மேலும் கால அவகாசம் வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட்டது. அதாவது நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 11, 2026 வரை அவகாசம் வழங்கப்பட்டது.
இதையும் படிங்க : எரிவாயு முன்பதிவு.. பயனாளர்களுக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பு
மாணவர்கள் மற்றும் பெற்றோரின் கோரிக்கையை ஏற்று இன்று (மார்ச் 11, 2026) நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இன்றுடன் நீட் தேர்வு விண்ணப்பத்திற்கான, விண்ணப்ப பதிவு நிறைவு பெற உள்ளது. இந்த நிலையில், நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மேலும் கால அவகாசம் நீட்டிக்கப்படாது என்று நீட் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை மார்ச் 08, 2026 அன்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.