AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்காவின் அனுமதி தேவையா? – நிபுணர்கள் விளக்கம்

India Oil Strategy : ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கு அமெரிக்காவின் அனுமதி தேவையா என்ற கேள்வி சமூக வலைதளங்களில் அதிகம் கேட்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, அமெரிக்கா சில வர்த்தக அழுத்தங்களை தளர்த்தி ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதற்கு தற்காலிக அனுமதி வழங்கியதாக செய்திகள் வெளியானது.

ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்காவின் அனுமதி தேவையா? – நிபுணர்கள் விளக்கம்
பிரதமர் நரேந்திர மோடி - டொனால்ட் டிரம்ப்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 06 Mar 2026 19:38 PM IST

ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கு அமெரிக்காவின் அனுமதி தேவையா என்ற கேள்வி சமூக வலைதளங்களில் அதிகம் கேட்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, அமெரிக்கா சில வர்த்தக அழுத்தங்களை தளர்த்தி ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதற்கு தற்காலிக அனுமதி வழங்கியதாக செய்திகள் வெளியானது.இந்தியா இந்த விஷயத்தில் வெளிநாடுகளின் அனுமதியை எதிர்பார்க்க வேண்டிய நிலை உள்ளது என்ற கருத்துகள் எழுந்துள்ளன. ஆனால் இந்த விளக்கம் உண்மைக்கு புறம்பானது என்றும், இந்தியாவின் எரிசக்தி கொள்கையை சரியாக புரிந்து கொள்ளாததாகவும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்தியாவுக்கு அமெரிக்காவின் அனுமதி தேவையா?

கடந்த 2026 பிப்ரவரி மாதத்தில் ரஷ்யா இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் வழங்கும் மிகப்பெரிய நாடாக இருந்தது. அந்த மாதத்தில் இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் தினமும் சுமார் 1 முதல் 1.7 மில்லியன் பேரல் வரை ரஷ்ய எண்ணெயை இறக்குமதி செய்தன. இது இந்தியாவின் மொத்த எண்ணெய் இறக்குமதியின் 25 முதல் 30 சதவீதம் வரை ஆகும். மாதத்திற்கு சுமார் 2.8 முதல் 4.8 கோடி பேரல் ரஷ்ய எண்ணெய் இந்தியா வாங்கியதாக மதிப்பிடப்படுகிறது. எளிமையாகச் சொன்னால், இந்தியா தினமும் சுமார் 10 லட்சம் பேரல் ரஷ்ய எண்ணெய் வாங்கி வருகிறது.

இதையும் படிக்க : 2030ல் இந்தியாவுக்கு தண்ணீர் பற்றாக்குறை அபாயம்: சர்வதேச ஆய்வு எச்சரிக்கை

இது இந்தியாவின் எரிசக்தி தேவை வெளிநாடுகளின் கட்டுப்பாட்டில் இல்லை என்பதை காட்டுவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவின் அனுமதி இல்லாமல் ரஷ்யாவிடம் இருந்து எணணெய் வாங்க முடியாது என்றால், இந்தியாவால் இவ்வளவு பெரிய அளவில் இறக்குமதி செய்ய முடியாது என்றும் தெரிவிக்கின்றனர். மேலும் 1.4 பில்லியன் மக்களின் எரிசக்தி தேவையை உறுதி செய்வது தான் இந்தியாவின் எரிசக்தி கொள்கையின் முக்கிய நோக்கம்.

இந்தியா தனது மொத்த கச்சா எண்ணெய் தேவையில் 85 சதவிகிதத்திற்கும் மேல் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறது. இதனால் கச்சா எண்ணெய் வாங்கும்போது விலை, அரசியல் அபாயங்கள் மற்றும் உள்நாட்டு பணவீக்கம் போன்ற பல காரணங்களை கவனத்தில் கொள்ள வேண்டியது உள்ளது.

இதையும் படிக்க : மேற்கு ஆசியா போர் பதட்டம்.. உஷார் நிலையில் இந்திய கடற்படை.. களமிறங்கிய ஐஎன்எஸ் சூரத்!

ஒவ்வொரு பேரல் எண்ணெய் விலை அது நேரடியாக போக்குவரத்து செலவு, உற்பத்திசெலவு ஆகியவற்றில் எதிரொலிக்கும். இது இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திலும் எதிரொலிக்கும். இதற்காகவே கடந்த 2022 ஆம் ஆண்டு உக்ரைன் போர் காலகட்டத்தில், இந்தியா தனது எரிசக்தி ஆதாரங்களை பல்வேறு நாடுகளுக்கும் பரவலாக்கும் முயற்சியை தொடங்கியது. அந்த காலகட்டத்தில் ரஷ்யவின் கச்சா எண்ணெய் குறைந்த விலையில் கிடைத்த காரணத்தால், இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்கள் அவற்றை அதிக அளவில் வாங்கின. இதற்கு இந்திய அரசும் ஆதரவு தெரிவித்தது.

இந்தியாவைப் போன்ற பெரிய நாடுகள் தங்களின் எரிசக்தி முடிவுகளை வேறு நாடுகளிடம் ஒப்படைக்காது. அவை உலக சந்தையில் பேச்சுவார்த்தை நடத்தும், பல்வேறு ஆதாரங்களை பயன்படுத்தும் மற்றும் மக்களுக்கு சிறந்த விலையை உறுதி செய்யும். தற்போது இந்தியா மேற்கொண்டு வரும் கொள்கையும் அதுவே என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

 

Follow Us