ரஷ்ய அதிபர் புதின் வீட்டின் மீது டிரோன் தாக்குதல் நடத்த உக்ரைன் முயற்சி.. ரஷ்யா பரபரப்பு குற்றச்சாட்டு!
Russia Accused Ukraine For Drone Attack Attempt On Putin's House | ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே மிக தீவிரமான போர் நிலவி வருகிறது. இந்த நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் வீட்டின் மீது உக்ரைன் டிரோன் தாக்குதல் செய்ய முயற்சி செய்ததாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மாஸ்கோ, டிசம்பர் 30 : உக்ரைன் மற்றும் ரஷ்யா (Ukraine and Russia) இடையே கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக கடுமையான போர் நிலவி வருகிறது. இந்த இரு நாடுகளுக்கும் இடையே நிலவி வரும் போரை முடிவுக்கு கொண்டு வந்து சமாதானத்தை உண்டாக்க அமெரிக்கா (America) உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகள் சமரசம் செய்து வருகின்றன. ஆனால், இரு நாடுகளுக்கும் இடையே இதுவரை சமரசம் எட்டாத நிலையில், தொடர் போர் நீடித்து வருகிறது. இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வரும் சூழலில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் (Russia President Vladimir Putin) வீட்டின் மீது உக்ரைன் டிரோன் தாக்குதல் செய்ய முயற்சி செய்ததாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ரஷ்ய அதிபர் புதின் வீட்டின் மீது டிரோன் தாக்குதல் நடத்த முயற்சி?
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வீட்டின் மீது உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்த முயற்சி செய்ததாக ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து கூறியுள்ள அவர், 91 ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்த முயற்சி செய்யப்பட்ட நிலையில், ரஷ்யாவின் வான்படை அனைத்தையும் அழித்து இந்த தாக்குதல் முயற்சியை முறியடித்ததாகவும் அவர் கூறியுள்ளார். இந்த தாக்குதல் முயற்சியின் போது யாருக்கும் எந்த வித சேதமோ, காயமோ ஏற்படவில்லை என்று கூறியுள்ள அவர், பேச்சுவார்த்தை நிலைப்பாடு மறுபரிசீலனை செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.




உக்ரைன் மீது பரபரப்பு குற்றச்சாட்டை வைத்த ரஷ்யா
#BREAKING | Russia says Ukraine tried to attack Putin’s residence
Kyiv launched a UAV attack on the state residence of Putin
Zelenskyy says the accusation is a lie@MollyGambhir has more pic.twitter.com/mFssJFsLmw
— WION (@WIONews) December 29, 2025
இதையும் படிங்க : ரஷ்யா – உக்ரைன் போர் முடிவுக்கு வருமா? டிரம்ப் மற்றும் ஜெலென்ஸ்கி இன்று சந்திப்பு!
ரஷ்யாவின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ள உக்ரைன்
ரஷ்யா உக்ரைன் மீது இத்தகைய குற்றச்சாட்டை முன்வைத்துள்ள நிலையில், அதற்கு உக்ரைன் மறுப்பு தெரிவித்துள்ளது. ரஷ்ய அதிபர் புதின் வீட்டின் மீது டிரோன் தாக்குதல் எதுவும் நடத்தவில்லை என்றும் ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் கூறியது பொய் என்றும் உக்ரைன் அரசு தரப்பில் இருந்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.