தென்னிந்தியத் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் அனுபமா பரமேஸ்வரன், பிப்ரவரி 18ல் தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். இந்த மகிழ்ச்சியான தருணத்தை முன்னிட்டு, அவர் நடித்து வரும் புதிய திரைப்படமான ‘கிரேசி கல்யாணம்’ படக்குழுவினர், அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் ஒரு சிறப்பு போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இந்தப் புதிய போஸ்டரில், அனுபமா பரமேஸ்வரன் ஒரு மணப்பெண் அலங்காரத்தில் மிகவும் உற்சாகமாக நடனமாடுவது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது. இந்தப் படத்தில் அவர் 'கீர்த்தி' என்ற கதாபாத்திரத்தில் அவர் நடிக்கிறார். போஸ்டரில் அவரது துடிப்பான தோற்றமும் புன்னகையும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்து சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.