சிரியா மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு.. 8 பேர் பலியான நிலையில், 20 பேர் படுகாயம்!
Syria Mosque Bomb Blast | சிரியாவின் ஹோம்ஸ் பகுதியில் ஒரு மசூதி ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த நிலையில், நேற்று (டிசம்பர் 26, 2025) அங்கு நடைபெற்ற குண்டு வெடிப்பில் மசூதியில் இருந்த 8 இஸ்லாமியர்கள் பலியான நிலையில் 20 பேர் காயமடைந்துள்ளனர்.
டமாஸ்கஸ், டிசம்பர் 27 : சிரியாவின் (Syria) ஹோம்ஸ் (Homs) நகரில் இஸ்லாமியர்களின் மத வழிபாட்டு தலமான மசூதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மசூதியில் ஏராளமான இஸ்லாமியர்கள் சென்று வழிபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அந்த வகையில் நேற்று (டிசம்பர் 26, 2025) வெள்ளிக்கிழமை என்பதால் அந்த மசூதியில் ஏராளமான இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டு இருந்துள்ளனர். அப்போது அந்த மசூதியில் எதிர்பாராத விதமாக கடும் அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடைபெற்றுள்ளது.
வெள்ளி கிழமை சிறப்பு தொழுகையின் போது மசூதியில் குண்டு வெடிப்பு
அதாவது, வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகையில் இஸ்லாமியர்கள் ஈடுபட்டுக்கொண்டு இருந்த நிலையில், அங்கு திடீரென பயங்க குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. சரியாக சிறப்பு தொழுகை நடைபெறும் மதிய நேரத்தில் இந்த குண்டு வெடிப்பு நடந்துள்ளது. இதில், மசூதிக்குள் வழிபாடு செய்துக்கொண்டு இருந்த 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதுமட்டுமன்றி, இந்த குண்டு வெடிப்பின் போது மசூதியில் வழிபாடு செய்துக்கொண்டு இருந்த மேலும் 21 பேர் படுகாயமடைந்துள்ளனர்.




இதையும் படிங்க : வங்காளதேசத்தில் மேலும் பதற்றம்.. மாணவர் தலைவர் மீது துப்பாக்கிச்சூடு!
குண்டு வெடிப்பு தொடர்பாக தீவிர விசாரணை
🕌 An explosion killed at least eight worshippers at a mosque in a predominantly Alawite area of Syria’s Homs on Friday, state media said, with an Islamist militant group claiming responsibility.
➡️ https://t.co/YIf17lbDP5 pic.twitter.com/OSkFHdnISE— AFP News Agency (@AFP) December 26, 2025
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அங்கு பலத்த காயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த நபர்களை மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும், பலியானவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தொழுகை நடந்துக்கொண்டு இருந்தபோது மசூதியில் குண்டு வெடிப்பு ஏற்பட்டு 8 பேர் பலியான சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.