தெலுங்குத் திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகரான சுஹாஸ், தற்போது தனது அடுத்த படமான 'ஹே பல்வந்த்'வெளியீட்டிற்காகக் காத்திருக்கிறார். இந்தப் படத்தின் விளம்பர நிகழ்வுகளின் போது, தனது திரைப்பயணம், தோல்விகள் மற்றும் தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமாவது குறித்து அவர் மனம் திறந்து பேசியுள்ளார்.கடந்த சில படங்களின் தோல்வி குறித்துப் பேசிய சுஹாஸ், "தொடர்ச்சியான தோல்விகள் என்னை ஆழமாகப் பாதித்தன. திருமணத்திற்குப் பிறகு குடும்பப் பொறுப்புகள் அதிகரித்ததால், பணத்திற்காகச் சில படங்களை எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் அவசரமாகத் தேர்ந்தெடுத்தேன்.