பாலிவுட் நடிகர் சல்மான் கானின் தந்தையும் பிரபல திரைக்கதை ஆசிரியருமான சலீம் கான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த பிப்ரவரி 17 அன்று காலை, மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் சலீம் கான் அனுமதிக்கப்பட்டுள்ளர். அவருக்கு இரத்த அழுத்தம் அதிகரித்ததன் காரணமாக மூளையில் சிறிய அளவு இரத்தக் கசிவு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியானது.