மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்கா இந்த வார இறுதிக்குள் ஈரானை தாக்க தயாராக உள்ளதாக சிஎன்என் உள்ளிட்ட நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆனால் இறுதி முடிவை இன்னும் அதிபர் டொனால்ட் டிரம்ப் எடுக்கவில்லை என தகவல்கள் கூறுகின்றன. அமெரிக்கா தற்போது மத்திய கிழக்கில் 13 போர்க்கப்பல்களை குவித்துள்ளது.