நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு மீண்டும் ஷாக் கொடுத்த டிரம்ப்.. இந்தியாவுக்கு10% வரி!
Trump's Tariff On India | இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்த வரிகள் செல்லாது என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், மீண்டும் 10 சதவீத உலகளாவிய வாரி விதிப்பை அமல் படுத்தியுள்ளார் டிரம்ப்.
நியூயார்க், பிப்ரவரி 21 : அமெரிக்கா (America) அதிபராக இரண்டாவது முறை பதவி ஏற்றது முதலே டொனால்ட் டிரம்ப் (Donald Trump) பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். குறிப்பாக இந்தியா (India), சீனா (China) உள்ளிட்ட உலக நாடுகள் மீது இறக்குமதி வரி உள்ளிட்ட மிக கடுமையான வரி முறைகளை அமல்படுத்தி வந்தார். இது தொடர்பாக நேற்று (பிப்ரவரி 20, 2026) அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த மனுவில் டிரம்புக்கு எதிராக நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். இந்த நிலையில், டிரம்ப் மீண்டும் 10 சதவீத உலகளாவிய வாரி விதிப்பை அமல் படுத்தியுள்ளார்.
உலக நாடுகள் மீது அடுக்கடுக்காக வரி விதிக்க டிரம்ப்
அமெரிக்கா அதிபராக பதவி ஏற்றது முதலே டிரம்ப் உலக நாடுகள் மீது வரி விதிப்பதில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். அதிபராக பதவி ஏற்றபோது, அமெரிக்காவின் பொற்காலம் மீண்டும் கொண்டுவரப்படும் என கூறிய அவர், கஜானாவை நிரப்பும் வகையில் சீனா, கடனா மற்றும் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் மீது அடுக்கடுக்கான வரியை விதித்தார். இந்த நிலையில், அர்சியலமைப்பு விதிகளை டிரம்ப் மீறிவிட்டார் என்றும், நாடாளுமன்ற அதிகாரம் தவறாக பயன்படுத்தப்படுகிறது என்றும் டிரம்ப் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதையும் படிங்க : எகிப்தில் 3,000 ஆண்டுகள் பழமையான தங்க நகரம் கண்டுபிடிப்பு.. வியப்பூட்டும் தங்க சுரங்கம்!
நேற்று விசாரணைக்கு வந்த டிரம்ப் மீதான வழக்கு
டிரம்பின் வரி விதிப்புகளால் தாங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம் என்று இறக்குமதி பொருட்களை சார்ந்த நிறுவனங்கள் கூறிவந்தன. இந்த நிலையில் தான் டிரம்ப் மீதான இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கு அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் நேற்று (பிப்ரவரி 20, 2026) விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், டிரம்பின் வரி விதிப்புகள் செல்லாது என அதிரடி தீர்ப்பு வழங்கினர். இதனால் கடுப்பான டிரம்ப் புதியதாக ஒரு வரி விதித்து உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க : 2026-2027 நிதியாண்டுக்கும் 8.25% வட்டி தானா?.. இபிஎஃப்ஓ குறித்து வெளியான முக்கிய தகவல்!
அதாவது, 10 சதவீத உலகளாவிய வரி விதிப்பை டிரம்ப் அமல்படுத்தியுள்ளார். அமெரிக்கா உடனான இந்தியாவின் வர்த்தக ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இந்தியா இந்த வரியை செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.