Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
Donald Trump

Donald Trump

டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் 45வது மற்றும் 47வது அதிபர் ஆவார். ஜனவரி 20, 2025 அன்று அவர் பதவியேற்றதைத் தொடர்ந்து , டிரம்ப் தொடர்ச்சியாக இரண்டு முறை பதவி வகித்த இரண்டாவது ஜனாதிபதியானார் , முதலாவது ஜனாதிபதி குரோவர் கிளீவ்லேண்ட் ஆவார். 78 வயதில், பதவியை வென்ற மிக வயதான அதிபர் டிரம்ப் ஆவார். டொனால்ட் டிரம்ப் ஜூன் 14 1946 ஆம் ஆண்டு நியூயார்க்கில் பிறந்தவர். ஆரம்பக்காலத்தில் டொனால்ட் டிரம்ப் தனது தந்தையின் ரியல் எஸ்டேட் மேம்பாட்டு நிறுவனத்தில் பணிபுரியத் தொடங்கினார், 1970களில் அதன் தலைமையை ஏற்றுக்கொண்டார். பின்னர் 2017 ஆம் ஆண்டு அமெரிக்காவின் 45வது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனை தொடர்ந்து, 2022 ஆம் ஆண்டு இடைக்காலத் தேர்தலுக்குப் பிறகு, டிரம்ப் இரண்டாவது முறையாக போட்டியிடும் தனது விருப்பத்தை அறிவித்தார், மேலும் 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நடந்த முதன்மைத் தேர்தல்களில், அவருக்கு எதிரான சட்ட வழக்குகளில் நிலையான முன்னேற்றம் இருந்தபோதிலும், தனது கட்சியின் வேட்புமனுவை வெல்ல போதுமான பிரதிநிதிகளை அவர் குவித்தார். பின்னர் இரண்டாவது முறையாக 47வது அதிபராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Read More

அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருத்துகளுக்கு 100% வரி – அதிபர் டிரம்ப் அடுத்த அதிரடி..

100% Tax On Medicine: தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய முடிவின்படி, வரும் அக்டோபர் 1 ஆம் தேதி முதல், பிராண்டட் அல்லது காப்புரிமை பெற்ற மருந்துப் பொருட்களின் இறக்குமதிக்கு அமெரிக்கா 100 சதவீத வரி விதிக்கும் என அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

H1B Visa : எச்1பி விசா கட்டணம் புதிய விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே பொருந்தும்.. அமெரிக்க அரசு அதிரடி!

White House on H1B Visa | டொனால்ட் டிரம்ப் எச்1பி விசா கட்டணத்தை உயர்த்தி வெளியிட்டுள்ள உத்தரவு செப்டம்பர் 20, 2025 முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த நிலையில், அது குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்றை வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது.

H-1B Visa: H-1B விசா கட்டணத்தை உயர்த்திய ட்ரம்ப்.. இந்தியர்களுக்கு பெரும் பாதிப்பு!

Donald Trump: அமெரிக்க அதிபர் ட்ரம்ப், H-1B விசா கட்டணத்தை $100,000 ஆக உயர்த்தியுள்ளார். இது இந்தியத் தொழிலாளர்களை பெரிதும் பாதிக்கும். அமெரிக்க தொழிலாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கவும், திறமையான வெளிநாட்டுத் தொழிலாளர்களை சிறப்புத் துறைகளில் பணியமர்த்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

போதைப்பொருள் அச்சுறுத்தல் நாடுகள்.. இந்தியா பெயரை சேர்த்த ட்ரம்ப்!

Donald Trump: அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியா, பாகிஸ்தான் உட்பட 23 நாடுகளை பெரிய அளவில் போதைப்பொருள் கடத்தல் அல்லது உற்பத்தி செய்யும் நாடுகளாக அறிவித்துள்ளார். இந்த நாடுகளின் சட்டவிரோத போதைப்பொருள் நடவடிக்கைகள் அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா மீது 100% வரி விதிக்க வேண்டும்.. ஐரோப்பிய நாடுகளுக்கு அதிபர் ட்ரம்ப் வலியுறுத்தல்..

US President Donald Trump: ஐரோப்பிய நாடுகளின் உயர் அதிகாரிகளுடன் வாஷிங்டனில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றதாகவும், அதில் அதிபர் ட்ரம்ப் தொலைபேசியில் கலந்துகொண்டதாகவும் கூறப்படுகிறது. அப்போது, இந்தியா மற்றும் சீனாவிற்கு 100 சதவீதம் வரை வரி விதிக்குமாறு ஐரோப்பிய நாடுகளிடம் கேட்டுக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘நண்பர் பிரதமர் மோடியுடன் பேசுவேன்’ இந்தியா அமெரிக்க உறவில் கிரீன் சிக்னல்.. ரத்தாகுமா வரி?

America Tariffs : இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி தொடர்பாக, அமெரிக்க இந்தியா உறவில் விரிசல் ஏற்பட்டிருந்த நிலையில், தற்போது அதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. வரும் வாரங்களில் பிரதமர் மோடியுடன் பேசுவேன் என டிரம்ப் கூறியுள்ளார். இதன் மூலம் இந்திய பொருட்கள் மீதான வரி குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்க – இந்தியா உறவு.. டிரம்பை புகழ்ந்து தள்ளிய பிரதமர் மோடி… நெகிழ்ச்சி பதிவு

PM Modi On US President Donald Trump : பிரதமர் மோடியுடன் நண்பராக இருப்பேன் என அமெரிக்க அதிபர் டிரம்ப்  கூறியதற்கு, தற்போது பிரதமர் மோடி பதில் அளித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டு உள்ளார். 

டிரம்புடன் பிரச்னை… திடீரென அமெரிக்க பயணத்தை ரத்து செய்த பிரதமர் மோடி.. என்ன மேட்டர்?

PM Modi US Visit : வரி தொடர்பாக இந்தியா அமெரிக்க உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், 2025 செப்டம்பர் 27ஆம் பிரதமர் மோடி அமெரிக்காவில் நடக்கும ஐ.நா சபையின் உயர்மட்ட கூட்டத்தில் பங்கேற்க இருந்தது. தற்போது, அந்த பயணத்தை பிரதமர் மோடி ரத்து செய்து இருப்பதாக தெரிகிறது.

இந்தியாவையும் ரஷ்யாவையும் சீனாவிடம் இழந்துவிட்டோம் – அதிபர் டிரம்ப் அதிரடி..

US President Trump: அதிபர் டிரம்ப் தனது ட்ரூத் சமூக ஊடக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “மிகவும் இருண்ட மற்றும் ஆழமான சீனாவிடம், இந்தியா மற்றும் ரஷ்யாவை இழந்துவிட்டோம். அவர்கள் ஒன்றிணைந்து நீண்ட மற்றும் வளமான எதிர்காலத்தை உருவாக்கட்டும்” என தெரிவித்துள்ளார்

டெக் தலைவர்களுக்கு விருந்து வழங்கிய டிரம்ப்.. ஆப்சென்ட் ஆன எலான் மஸ்க்!

White House Tech Leaders Dinner | அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில், அமெரிக்காவில் உள்ள டெக் தலைவர்களுக்கு டொனால்ட் டிரம்ப் விருந்து வழங்கினார். இந்த நிகழ்வில் அமெரிக்காவில் உள்ள அனைத்து டெக் தலைவர்களும் பங்கேற்ற நிலையில், எலான் மஸ்க் மட்டும் பங்கேற்கவில்லை.

தங்கம் உற்பத்தியில் தடுமாறும் அமெரிக்கா.. இந்த நாடுகள்தான் டாப் லிஸ்ட்!

Top Countries By Gold Production : அமெரிக்காவின் வரிக் கொள்கைகள் மூலம் இந்தியா, சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இது ஒருபுறமிருக்க தங்க உற்பத்தியில் அமெரிக்கா டாப் லெவலில் இல்லை. அந்த வகையில் பல நாடுகள் அமெரிக்காவை பின் தள்ளியுள்ளன.

இந்தியா மீதான வரி ரத்தாகுமா? நீதிமன்றம் போட்ட தீர்ப்பு… கொதித்தெழுந்த டிரம்ப்!

Donald Trump On Tariffs : அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த பெரும்பாலான வரிகள் சட்டவிரோதமானவை என அமெரிக்க நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், வரிகளை விதிப்பதன் மூலம் தனது அதிகாரத்தை டிரம்ப் மீறியதாகவும் அவர் கூறினார். நீதிமன்ற உத்தரவு பாரபட்சமானவை என டிரம்ப் தெரிவித்தார்.

CM MK Stalin On US Tariffs: ’திருப்பூர் ஜவுளித்துறை பாதிப்பு.. நடவடிக்கை தேவை’ மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்

Tirupur Exporters Hit By US Tariffs: அமெரிக்காவின் வரியால் தமிழக ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், திருப்பூர் ஜவுளித்துறையில் ரூ.3,000 கோடி வர்த்தக பாதிப்படைந்ததாகவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவும் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

திருப்பூர் டூ ஐடி துறை .. அமெரிக்காவின் 50 சதவீத வரி.. இந்தியாவுக்கு இவ்வளவு பாதிப்பா?

US President Trump Tariffs : அமெரிக்கா அறிவித்துள்ள 50 சதவீத 22025 ஆகஸ்ட் 27ஆம் தேதியான இன்று முதல் அமலுக்கு வர உள்ளது. இதனால், இந்தியாவின் பொருளதாரம் கடும் பாதிப்புகள் ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. குறிப்பாக, ஜவுளித்துறை, ஐடி துறைகள் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என பொருளாதார வல்லுநர்கள் கூறி வருகின்றனர்.

Narendra Modi: 4 முறை ட்ரம்ப் தொலைபேசி அழைப்பு.. நிராகரித்த பிரதமர் மோடி!

அமெரிக்கா விதித்த இறக்குமதி வரியால் இந்தியா-அமெரிக்கா உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. அதிபர் ட்ரம்ப் தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்றும், பிரதமர் மோடி அழைப்பை ஏற்க மறுத்ததாக ஜெர்மனியைச் சேர்ந்த நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்தியாவை "இறந்த பொருளாதாரம்" என ட்ரம்ப் குறிப்பிட்டது மோடியின் கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.