இந்தியா – அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் குறிப்பில் அமெரிக்கா சில மாற்றங்கள் செய்துள்ளது. வெள்ளை மாளிகை வெளியிட்டிருந்த முதற்கட்ட தகவலில், இந்தியா 500 பில்லியன் டாலர் மதிப்பிலான அமெரிக்கப் பொருட்களை கொள்முதல் செய்ய உறுதி அளித்துள்ளது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் தற்போது அந்த வார்த்தை மாற்றப்பட்டு, இந்தியா கொள்முதல் செய்ய திட்டமிட்டுள்ளது என மாற்றப்பட்டுள்ளது.