பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அந்த நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் அதிரடி கருத்து வெளியிட்டுள்ளார். அமெரிக்கா தனது நலன்களுக்காக பாகிஸ்தானை பயன்படுத்தி, பின்னர் டாய்லெட் பேப்பரைவிட மோசமாக தூக்கி எறிந்துவிட்டது என அவர் கடுமையாக விமர்சித்துள்ளார். கடந்த 1999 ஆம் ஆண்டுக்குப் பிறகு, குறிப்பாக 2001 செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பிந்தைய காலகட்டத்தில், அமெரிக்காவுடன் மீண்டும் இணைந்தது பாகிஸ்தானுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதாக ஆசிஃப் தெரிவித்துள்ளார்.