AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மகா சிவராத்திரி 2026: செய்ய வேண்டிவையும்.. தவிர்க்க வேண்டியவையும்..

Maha Shivratri 2026 Do's and Dont's; மகா சிவராத்திரி நாளில் செய்ய வேண்டியவற்றை சரியாக செய்து, தவிர்க்க வேண்டியவற்றை தவிர்த்தால், சிவபெருமானின் அருள் நிச்சயமாக கிடைக்கும். பக்தியுடன், சுத்தமான மனதுடன் வழிபட்டால், வாழ்க்கையில் அமைதி, செழிப்பு மற்றும் முன்னேற்றம் கிடைக்கும்.

மகா சிவராத்திரி 2026: செய்ய வேண்டிவையும்.. தவிர்க்க வேண்டியவையும்..
மகா சிவராத்திரி 2026
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 15 Feb 2026 07:40 AM IST

மகா சிவராத்திரி (Maha Shivratri) என்பது இந்து மதத்தில் மிகவும் முக்கியமான திருவிழாக்களில் ஒன்றாகும். இந்த நாள் முழுவதும் சிவபெருமானை நினைத்து விரதம் இருந்து, இரவு முழுவதும் விழித்திருந்து பூஜை செய்வது சிறப்பாகக் கருதப்படுகிறது. இந்த புனித நாளில் சரியான முறையில் வழிபாடு செய்தால், வாழ்க்கையில் உள்ள துன்பங்கள் நீங்கி, ஆனந்தமும் அமைதியும் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. ஆனால், இந்த நாளில் சில முக்கியமான விதிமுறைகளை கடைபிடிக்காமல் இருப்பது வழிபாட்டின் பலனை குறைக்கக்கூடும். அதனால், மகா சிவராத்திரி நாளில் செய்ய வேண்டியவை மற்றும் தவிர்க்க வேண்டியவற்றை தெரிந்து கொள்ளுவது அவசியம்.

Also Read : மகா சிவராத்திரி 2026.. 300 ஆண்டுகளுக்குப் பிறகு சுப யோகங்களின் சேர்க்கை!

செய்ய வேண்டியவை:

1. அதிகாலையில் எழுந்து சுத்தமாக இருப்பது:

மகா சிவராத்திரி நாளில் அதிகாலையில் எழுந்து குளித்து, மனமும் உடலும் சுத்தமாக இருக்க வேண்டும். இது வழிபாட்டிற்கு முக்கியமான தொடக்கம்.

2. விரதம் இருப்பது:

இந்த நாளில் பலர் விரதம் இருந்து சிவபெருமானை வழிபடுகின்றனர். முழு விரதம் இருக்க முடியாதவர்கள் சாத்விக உணவுகளை எடுத்துக்கொண்டு பக்தியுடன் இருக்கலாம்.

3. சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்வது:

பால், தயிர், தேன், நெய், கங்கைநீர் போன்றவற்றால் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்வது மிகச் சிறப்பு. இது பாவங்களை நீக்கும் என்று நம்பப்படுகிறது.

4. மந்திர ஜபம் மற்றும் தியானம்:

“ஓம் நமசிவாய” போன்ற மந்திரங்களை தொடர்ந்து ஜபிப்பது மன அமைதியை அளிக்கும். இதன் மூலம் ஆன்மீக முன்னேற்றமும் கிடைக்கும்.

5. இரவு முழுவதும் விழிப்பு:

சிவராத்திரி இரவில் விழித்து இருந்து சிவனை தியானிப்பது மிக முக்கியமான வழிபாட்டு முறையாகும்.

6. கோவில் தரிசனம்:

சிவாலயத்திற்கு சென்று தரிசனம் செய்வது மிகுந்த புண்ணியம் தரும். குறிப்பாக ஜோதிர்லிங்க ஸ்தலங்கள் மிகவும் முக்கியம்.

தவிர்க்க வேண்டியவை:

1. அசைவ உணவுகளை தவிர்க்கவும்:

இந்த நாளில் அசைவம், மதுபானம் போன்றவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும். சுத்தமான சைவ உணவுகளை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும்.

2. கோபம் மற்றும் தீய எண்ணங்களை தவிர்க்கவும்:

சிவராத்திரி என்பது மனத்தூய்மை பெரும் நாள். கோபம், பொறாமை, கெட்ட எண்ணங்கள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

3. தூங்குவதை தவிர்க்க வேண்டாம்:

இந்த இரவில் தூங்குவது நல்லதல்ல என்று கருதப்படுகிறது. விழித்திருந்து சிவனை தியானிப்பதே முக்கியம்.

Also Read :மஹாசிவராத்திரியின் போது இந்த தவறுகளை செய்யாதீங்க!

4. தவறான வழிபாட்டு முறைகள் செய்யக்கூடாது:

சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கும் பொருட்களில் தூய்மை இருக்க வேண்டும். தவறான அல்லது அசுத்தமான பொருட்களை பயன்படுத்தக்கூடாது.

5. இலைகள் மற்றும் பூக்களை கவனமாக பயன்படுத்தவும்:

சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்யும் போது வில்வ இலை மிகவும் முக்கியமானது. சேதமடைந்த இலைகளை பயன்படுத்தக்கூடாது.

6. விரத விதிகளை அலட்சியப்படுத்த வேண்டாம்:

விரதம் இருப்பவர்கள் அதற்கான விதிமுறைகளை சரியாக பின்பற்ற வேண்டும். உடல் நிலைக்கு ஏற்ற வகையில் விரதம் இருக்க வேண்டும்.

Follow Us