சேலம் கொண்டாலம்பட்டி மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை – கணக்கில் வராத பணம் பறிமுதல்
தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு துறை ஏடிஜிபியாக அருண் உத்தரவின்படி தமிழக முழுதும் மாநகராட்சி நகராட்சி அலுவலகங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. ந்நிலையில் சேலம் தாதகாப்பட்டி பகுதியில் உள்ள கொண்டலாம்பட்டி மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று அதிரடியாக சென்று சோதனை நடத்தினர்.
தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு துறை ஏடிஜிபியாக அருண் உத்தரவின்படி தமிழக முழுதும் மாநகராட்சி நகராட்சி அலுவலகங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. ந்நிலையில் சேலம் தாதகாப்பட்டி பகுதியில் உள்ள கொண்டலாம்பட்டி மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று அதிரடியாக சென்று சோதனை நடத்தினர். இந்த மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் கொண்டலாம்பட்டி பகுதிக்குட்பட்ட வீடுகள், கடைகள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி சார்பில் சொத்து வரி, குடிநீர் வரி உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு பணம் வசூலிக்கப்படுகிறது. மேலும் புதிய குடிநீர் இணைப்பு போன்ற பணிகளுக்கும் பணம் வசூலிக்கப்படுகிறது. இந்த நிலையில் பல்வேறு பணிகளுக்கு லஞ்சம் பெறப்படுவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில் ஏ.டி.எஸ்.பி கிருஷ்ண ராஜன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் முருகன் நரேந்திரன் ரவிக்குமார் உள்ளிட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் மண்டல அலுவலகத்தில் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் பில் கலெக்டராக பணிபுரிந்து வரும் செல்வி என்பவரது வண்டியில் கணக்கில் காட்டப்படாத 30,000 ரூபாயை லஞ்ச ஒழிப்பு போலீசார் கண்டுபிடித்தனர். இந்த பணம் எவ்வாறு வந்தது என்பது குறித்து பில் கலெக்டர் செல்வியிடம் போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். மாலை 4:30 மணி அளவில் மண்டல அலுவலகத்திற்குச் சென்ற போலீசார் சுமார் 2 மணி நேரம் சோதனை நடத்தினர்.
