AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
நடுரோட்டில் படுத்து அலப்பறை செய்த போதை ஆசாமி! போலீஸ் வாகனத்தை நிறுத்தி அட்ராசிட்டி!

நடுரோட்டில் படுத்து அலப்பறை செய்த போதை ஆசாமி! போலீஸ் வாகனத்தை நிறுத்தி அட்ராசிட்டி!

Vinoth V
Vinoth V | Updated On: 02 Jul 2026 19:56 PM IST

திருப்பத்தூர் பேருந்து நிலையத்திற்கு செல்லும் முக்கிய பிரதான சாலையில் மாலை நேரத்தில் மது போதை ஆசாமி ஒருவர் மது குடித்து விடு குப்புற படுத்து உறங்கினார். இதனால் போக்குவரத்து சிறிது பாதிக்கப்பட்டது இதனை அறிந்த போக்குவரத்து காவலர் நடுரோட்டில் படுத்து உறங்கிய போதை ஆசாமியை அப்புறப்படுத்தினர்

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் புதிய பேருந்து நிலையம் அமைந்துள்ளது. இந்த நிலையில் திருப்பத்தூர் பேருந்து நிலையத்திற்கு செல்லும் முக்கிய பிரதான சாலையான திருப்பத்தூர் வழியாக கிருஷ்ணகிரி செல்லும் சாலையில் ஒரு நாளைக்கு சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலையை பயன்படுத்தி தான் திருவண்ணாமலை சேலம் தர்மபுரி கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டத்திற்கும் பொதுமக்கள் பயணித்து வருகின்றனர். இந்த நிலையில் அந்த முக்கிய பிரதான சாலையில் மாலை நேரத்தில் மது போதை ஆசாமி ஒருவர் மது குடித்து விடு குப்புற படுத்து உறங்கினார். இதனால் போக்குவரத்து சிறிது பாதிக்கப்பட்டது இதனை அறிந்த போக்குவரத்து காவலர் நடுரோட்டில் படுத்து உறங்கிய போதை ஆசாமியை அப்புறப்படுத்தினர் அந்த வழியாக வந்த போலிஷ் போக்குவரத்து பேட்ரோல் வண்டியை நிறுத்தி அந்த போதையா சாமி அட்ராசிட்டியில் ஈடுபட்டார். பின்னர் வண்டியில் இருந்து போலீஸ் இறங்கி வந்து போதை ஆசாமியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர்படுத்தினார்.

Published on: Jul 02, 2026 07:51 PM
Follow Us