அடி அண்ணாமலை கூட்டுறவு நியாயவிலைக் கடையில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க், அடி அண்ணாமலையில் செயல்பட்டு வரும் கூட்டுறவு நியாய விலைக் கடையில் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, நியாய விலைக் கடையில் அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் இருப்பு மற்றும் அவற்றின் தரம் குறித்து ஆய்வு செய்தார். மேலும், பொருட்கள் முறையாக விநியோகிக்கப்படுகிறதா என்பதை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க், அடி அண்ணாமலையில் செயல்பட்டு வரும் கூட்டுறவு நியாய விலைக் கடையில் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, நியாய விலைக் கடையில் அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் இருப்பு மற்றும் அவற்றின் தரம் குறித்து ஆய்வு செய்தார். மேலும், பொருட்கள் முறையாக விநியோகிக்கப்படுகிறதா என்பதை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து, அந்த நியாய விலைக் கடையின் கீழ் உள்ள மொத்த குடும்ப அட்டைதாரர்களின் எண்ணிக்கை, பொருட்கள் விநியோக விவரங்கள் உள்ளிட்ட தகவல்களை கேட்டறிந்த மாவட்ட ஆட்சியர், பராமரிக்கப்பட்டு வந்த பதிவேடுகளையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அரசு வழங்கும் அத்தியாவசிய பொருட்கள் பொதுமக்களுக்கு தரமாகவும், தட்டுப்பாடின்றியும் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
