மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கிய பெண்…. ஆம்புலன்ஸாக மாறிய அரசு பேருந்து
தாம்பரம் அருகே பேருந்தின் உள்ளே மயக்கம் அடைந்த பெண்ணிற்காக பயணிகளுடன் ஓட்டுனர் பேருந்தையே தாம்பரம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றது பாராட்டை பெற்றுள்ளது. உடனடியாக செயல்பட்டு பயணிகளுடன் பேருந்தை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று பெண்ணின் உயிரை காப்பாற்றிய ஓட்டுனருக்கு பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.
தாம்பரம் அருகே பேருந்தின் உள்ளே மயக்கம் அடைந்த பெண்ணிற்காக பயணிகளுடன் ஓட்டுனர் பேருந்தையே தாம்பரம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றது பாராட்டை பெற்றுள்ளது. சென்னை மேற்க்கு தாம்பரத்தில் இருந்து திருவான்மையூர் நோக்கி ஜூன் 30, 2026 நேற்று மாலை சென்ற பேருந்தில் 20க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர், அப்போது திடிரென பேருந்தில் இருந்த பெண் ஒருவர் மயஙகி விழுந்ததால் அதிர்ச்சியடைந்த பயணிகள் கூச்சலிட்டடுள்ளனர், இதனையடுத்து பேருந்தை உடனடியாக பயணிகளுடன் தாம்பரம் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு இயக்கிய பேருந்து ஓட்டுனர் பொது மக்கள் உதவியுடன் மயக்கத்தில் இருந்த பெண்ணை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், அங்கு அவருக்கு தீவிர சிக்கிச்சை அளிக்கபட்டு வருகிறது. உடனடியாக செயல்பட்டு பயணிகளுடன் பேருந்தை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று பெண்ணின் உயிரை காப்பாற்றிய ஓட்டுனருக்கு பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.
