AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

வாய்ப்பு தேடி ஓடும் ஓடுகாலி ஆதவ் அர்ஜுனா.. சட்ட நடவடிக்கை பாயும்.. கே.பி.முனுசாமி அதிரடி எச்சரிக்கை!

KP Munusamy : அதிமுகவை இனிமேல் விமர்சித்தால் தமிழக வெற்றிக் கழகத்தின் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்தக் கட்சியின் துணை பொதுச் செயலாளர் கே. பி. முனுசாமி தெரிவித்தார். மேலும், கடுமையாக விமர்சித்தார் .

வாய்ப்பு தேடி ஓடும் ஓடுகாலி ஆதவ் அர்ஜுனா.. சட்ட நடவடிக்கை பாயும்.. கே.பி.முனுசாமி அதிரடி எச்சரிக்கை!
ஆதவ் மீது சட்டப்படி நடவடிக்கை
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 05 Jul 2026 18:00 PM IST

தமிழகத்தில் பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராக இருந்து வரும் ஆதவ் அர்ஜுனா அதிமுக குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். இந்த நிலையில், அவரது கருத்துக்கு அதிமுகவின் துணைப் பொதுச் செயலாளர் கே. பி. முனுசாமி கடுமையான விமர்சனங்களை முன் வைத்துள்ளார். இது தொடர்பாக, கிருஷ்ணகிரியில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக வெற்றிக் கழக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா போல கொள்கை இல்லாமல் பல்வேறு கட்சிகளுக்கு ஓடுபவர்கள் அதிமுக தொண்டர்கள் கிடையாது. வாய்ப்பு கிடைக்கும் கட்சிகளுக்கு ஓடுகாலியாக சென்றவர்தான் ஆதவ் அர்ஜுனா. இவருக்கென தனித்தன்மை கிடையாது. தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் என். ஆனந்தை பார்ப்பதற்காக அதிமுகவின் 2- ஆம் கட்ட தலைவர்கள் ஆட்டுக் கூட்டம் போல ஓடுகின்றனர். இவர்கள் செல்வது தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜயை பார்ப்பதற்காக அல்ல.

ஆதவ் அர்ஜுனா மீது சட்டப்படி நடவடிக்கை

இவர்கள் பெரிய ஜாம்பவான்களும் கிடையாது. சந்தர்ப்பவாதிகள், துரோகிகள், ஓடு காலிகள், ஆதவ் அர்ஜுனாவுக்கும், விஜயபாஸ்கருக்கும் பெரிய அளவில் வித்தியாசம் ஏதும் இல்லை. தமிழக வெற்றி கழகத்துடன் அதிமுக இணைந்து விடும் என்று இனியும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசி வந்தால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அதிமுகவை சேர்ந்த ஒவ்வொரு தொண்டர்களும் ஜாம்பவான்கள் தான். இந்த தொண்டர்களால் உருவாக்கப்பட்டவர்கள் தான் இது போன்ற ஓடு காலிகள், ஜாம்பவான்கள் அனைவரும் அதிமுகவிலேயே தொடர்கின்றனர்.

மேலும் படிக்க: தவெகவில் இணைந்த திமுக எம்பி ஜெகத்ரட்சகனின் மகன் சந்தீப் ஆனந்த் – தமிழக அரசியலில் பரபரப்பு

தவெகவில் இணைந்தது ஏமாற்றும் கூட்டம்

வெறுமனே லெட்டர் பேர்டை மட்டும் வைத்து ஏமாற்றும் கூட்டம் தான் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளது. 31 ஆண்டு காலம் அதிமுக கொண்டு வந்த திட்டங்களால் தான் தமிழகம் தற்போதும் முதன்மை மாநிலமாக திகழ்ந்து வருகிறது. தலைமை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட இயக்கமும், கிட்டத்தட்ட 2 கோடி தொண்டர்களை உள்ளடக்கிய இயக்கம் அதிமுக தான் என்று தெரிவித்தார். அதிமுகவை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இதில், அதிமுகவை சேர்ந்தவர்கள் அனைவரும் தமிழக வெற்றி கழகத்தில் விரைவில் இணைவார்கள்.

அதிமுக விரைவில் தவெகவில் இணையும்

அதிமுக விரைவில் தமிழக வெற்றி கழகத்துடன் இணைக்கப்படும். இதனால், திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும், தமிழக வெற்றிக் கழகத்துக்கும் இடையே தான் போட்டி. தமிழக வெற்றி கழகத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் விரைவில் தமிழக வெற்றி கழகத்தில் இணைவார்கள் என்று தெரிவித்திருந்தார். இவர் இந்த கருத்துக்கு தான் அதிமுகவின் துணை பொது செயலாளர் கே. பி. அன்பழகன் எதிர் கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: திருமாவளவனை துணை முதலமைச்சராக்க வேண்டும்.. விசிக கூட்டத்தில் சிறப்பு தீர்மானம்!

Follow Us