AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தமிழகத்தில் நவம்பர் 23 முதல் மீண்டும் தீவிரமடையும் மழை! 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

Chennai Weather: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நவம்பர் 20, 21 ஆகிய தேதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பொதுவாக வறண்ட வானிலையே நிலவும். அதிகபட்ச வெப்பநிலை 32 முதல் 33 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 22 முதல் 23 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.

தமிழகத்தில் நவம்பர் 23 முதல் மீண்டும் தீவிரமடையும் மழை! 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 21 Nov 2026 06:25 AM IST

நவம்பர் 21, 2026: தமிழகத்தில் நவம்பர் 23ஆம் தேதி முதல் மீண்டும் மழை தீவிரமடைய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக தென் மாவட்டங்கள் மற்றும் வடகடலோர தமிழகத்தில் பரவலாக மழை பெய்யக்கூடும் என்றும், சில மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவான அக்வான் புயல் காரணமாக தமிழகத்திற்கு அதிக அளவில் மழை கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், புயல் தனது பாதையை மாற்றி வடக்கு ஆந்திரா – தெற்கு ஒடிசா இடையே கரையைக் கடந்ததால் தமிழகத்தில் எதிர்பார்த்த அளவுக்கு மழை பதிவாகவில்லை.

மேலும் படிக்க: திருப்பரங்குன்றம் விவகாரம்.. தவெக அரசின் அடுத்த சட்ட நவடிக்கை என்ன முதல்வரே? மு.க.ஸ்டாலின் கேள்வி!

இந்த நிலையில், அடுத்தகட்டமாக நவம்பர் 23ஆம் தேதி முதல் தமிழகத்தில் மழைக்கான வாய்ப்பு அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களை மட்டும் இன்று லேசான மழை இருக்கக்கூடும் என கணிக்கப்பட்டிருக்கிறது

நவம்பர் 23ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்பு

இதன்படி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 17 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும். புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

மேலும் படிக்க: தமிழகத்தில் அடுத்த பேரதிர்ச்சி.. ரயிலில் 5 நாள்களாக கிடந்த பெண் சடலம்.. வலுக்கட்டாயமாக கற்பழித்து கொலை செய்த கொடூரன்!

நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், கள்ளக்குறிச்சி, நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

நவம்பர் 25, 26 தேதிகளிலும் மழை தொடரும்

நவம்பர் 25ஆம் தேதி தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களிலும், நவம்பர் 26ஆம் தேதி கரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னையில் எப்படி இருக்கும்?

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நவம்பர் 20, 21 ஆகிய தேதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பொதுவாக வறண்ட வானிலையே நிலவும். அதிகபட்ச வெப்பநிலை 32 முதல் 33 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 22 முதல் 23 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.

இதற்கிடையே, நீலகிரி மாவட்டம் மற்றும் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் ஓரிரு இடங்களில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Follow Us