ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு கட்டாய பணியிட மாற்றம் – அரசாணை வெளியீடு
School Staff Transfer Counselling Guidelines : இனி பள்ளிக் கல்வித்துறையில் ஒரே அலுவலகத்தில் 3 ஆண்டிற்கு மேல் பணியாற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் கட்டாய பணி இடமாற்றம் செய்யப்படுவார்கள் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
சென்னை, நவம்பர் 20 : தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் அலுவலக ஊழியர்களுக்கு ஆண்டுத்தோறும் பொது மாறுதல் கலந்தாய்வு நடத்துவதற்கான விதிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அதன் படி இனி பள்ளிக் கல்வித்துறையில் ஒரே அலுவலகத்தில் 3 ஆண்டிற்கு மேல் பணியாற்றும் ஆசிரியர் (Teachers ) அல்லாத பணியாளர்கள் கட்டாய பணி இடமாற்றம் செய்யப்படுவார்கள் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு கட்டாய பணியிட மாற்றம்
தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர் அல்லாத அலுவலக ஊழியர்கள் 2026-2027 ஆம் கல்வியாண்டிற்கான பொது மாறுதல் கலந்தாய்வை EMIS இணையதளம் வாயிலாக வெளிப்படையாக நடத்துவதற்கான அரசாணையை பள்ளிக் கல்வித்துறை செயலாளர் இன்னசென்ட திவ்யா வெளியிட்டுள்ளார். அதில், தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் அலுவலக ஊழியர்களுக்கு ஆண்டுத்தோறும் பொது மாறுதல் கலந்தாய்வு நடத்துவதற்கான விதிமுறைகள் அரசு வெளியிட்டுள்ளது.
இதையும் படிக்க : முதலீடுகளை ஈர்ப்பதில் ஆரோக்கியமான போட்டி – ஆந்திராவுக்கு முதலீட்டு தகவல்கள் கசிந்ததாக குற்றச்சாட்டு – கைடன்ஸ் தமிழ்நாடு விளக்கம்




மேலும், இவர்களுக்கான கலந்தாய்வு ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1, 2026 முதல் ஆகஸ்ட் 31, 2026 அன்றுக்குள் நடத்தி முடிக்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. தொடர்ந்து, செப்டம்பர் 1, 2026 முதல் ஜூன் 30, 2026 வரையில் பதவி உயர்வு உள்ளிட்டவற்றால் ஏற்படும் காலிப்பணியிடங்களுக்கு நிர்வாக மாறுதல் அளிக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
3 ஆண்டுகள் மேல் பணிபுரிபவர்களுக்கு கட்டாய மாறுதல்
இது தொடர்பாக வெளியான அளிக்கையில் ஒரே அலுவலகத்தில் 3 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேல் பணியாற்றும் ஊழியர்கள் கட்டாயமாக பணிமாறுதலுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் அவர்களில் வட்டக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர், கண்காணிப்பாளர், உதவியாளர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், ஆய்வக உதவியாளர், பதிவுரு எழுத்தர் உள்ளிட்டோர் அடங்குவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக புகார் அள்லது முறைக்கேடுகளுக்கு உள்ளனாவர்கள் மீண்டும் அதே அலுவலகத்தில் பணியாற்ற அனுமதிக்கபமாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் முறையில் கலந்தாய்வு
புகார்கள் அல்லது முறைகேடுகளுக்கு எதிராக நிர்வாகக் காரணங்களுக்காக இடமாற்றம் செய்யப்பட்டவர்கள், மீண்டும் அதே அலுவலகத்தைத் தேர்ந்தெடுக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது மாறுதல் கலந்தாய்வு இனி முழுமையாக கல்வி தகவல் மேலாண்மை முகமை (EMIS) இணையதளம் மூலமாக மட்டுமே வெளிப்படையாக நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : செஞ்சி சிறுமி வழக்கு! சிபிசிஐடி விசாரணை வளையத்தில் 10 பேர்.. குற்றவாளியை நெருங்கும் போலீசார்?
யாருக்கு விதிவிலக்கு?
குறிப்பாக மருத்துவக் காரணங்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கணவன்-மனைவி பணி முன்னுரிமை போன்ற சிறப்பு நிகழ்வுகளுக்கு இதில் விதிவிலக்கு உண்டு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறையின் இயக்குநரக அளவிலான பணியிடங்களுக்கு சென்னையில் உள்ள இயக்குனர் அலுவலகத்தின் அதிகாரியும், வருவாய் மாவட்டத்திற்குள் உள்ள அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளுக்கான மாறுதல் கலந்தாய்வை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் நடத்துவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.