AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களை தடுக்க என்ன செய்ய வேண்டும்? விழிப்புணர்வு கையேட்டை வெளியிட்ட பள்ளிக்கல்வித் துறை

POCSO Awareness Guide : குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களை தடுப்பது, அதனை முன்கூட்டியே கண்டறிவது மற்றும் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு உரிய பாதுகாப்பை வழங்குவது தொடர்பாக பள்ளிக்கல்வித் துறை சார்பில் 23 பக்க விழிப்புணர்வு கையேடை வெளியிடப்பட்டுள்ளது. அதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.

குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களை தடுக்க என்ன செய்ய வேண்டும்? விழிப்புணர்வு கையேட்டை வெளியிட்ட பள்ளிக்கல்வித் துறை
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 25 Sep 2026 17:15 PM IST

சென்னை, செப்டம்பர் 25 : குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களை தடுப்பது, அதனை முன்கூட்டியே கண்டறிவது மற்றும் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு உரிய பாதுகாப்பை வழங்குவது தொடர்பாக பள்ளிக்கல்வித் துறை சார்பில் 23 பக்க விழிப்புணர்வு கையேடை வெளியிடப்பட்டுள்ளது. அந்த கையேட்டில் குறிப்பிட்டுள்ளதன் படி, 18 வயதுக்குட்பட்ட எந்தவொரு குழந்தையும், பாலின வேறுபாடின்றி, எந்த வயதிலும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் வாய்ப்பு இருப்பதாக கையேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களை தடுக்க என்ன செய்ய வேண்டும்?

குழந்தைகளை பாதுகாப்பான சூழலில் வளர்ப்பதில் ஆசிரியர்களுக்கும் பள்ளி நிர்வாகத்துக்கும் முக்கிய பொறுப்பு இருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களைத் தடுக்கும் போக்சோ சட்டம் தொடர்பான அடிப்படை தகவல்களை ஆசிரியர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும் எனவும் பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும், தங்கள் பாதுகாப்பில் உள்ள குழந்தைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் நடந்தால், அந்த சூழலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து ஆசிரியர்கள் முன்கூட்டியே தயாராக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : கழுத்து நிறைய நகை.. கட்டுக்கட்டாக பணம்.. இன்ஸ்டாவில் ரீல்ஸ்.. அனைத்தும் க்ளோஸ்.. நாகர்கோவிலில் அதிர்ச்சி சம்பவம்!

குறிப்பாக பெற்றோர் குழந்தைகளிடம் போதிய அன்பு காட்டாமல் இருப்பது அல்லது குழந்தைகளை புறக்கணிப்பது மட்டுமே பாலியல் துன்புறுத்தலுக்கான காரணம் என்ற கருத்து தவறானது என்றும் அன்பு மற்றும் அக்கறையுடன் வளர்க்கப்படும் குழந்தைகளும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலியல் துன்புறுத்தலுக்குப் பிறகு ஏற்படும் மாற்றங்கள்

பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் குழந்தைகளின் மனநிலை மற்றும் நடத்தையில் திடீரென மாற்றம் ஏற்படுவது, வழக்கத்தைவிட அதிகமாக கோபப்படுவது அல்லது தனிமையில் இருப்பது போன்ற மாற்றங்கள் கவனிக்கப்பட வேண்டியவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தன்னைத் தானே காயப்படுத்திக் கொள்வது, போதைப் பொருட்களை பயன்படுத்துவது, படுக்கையில் சிறுநீர் கழிப்பது, தூக்கத்தில் பயப்படுவது அல்லது மோசமான கனவுகளால் விழிப்பது, உணவுப் பழக்கத்தில் திடீர் மாற்றம் ஏற்படுவது போன்றவையும் கவனிக்க வேண்டிய அறிகுறிகளாக குறிப்பிடப்பட்டுள்ளன. அதேபோல், வயதுக்கு பொருந்தாத அளவுக்கு பாலியல் தொடர்பான விஷயங்களை தெரிந்துகொள்வது, பாலியல் சார்ந்த படங்களை வைத்திருப்பது, அதிக பயத்துடன் இருப்பது அல்லது வீட்டை விட்டு வெளியேறுவது போன்ற நடத்தை மாற்றங்களையும் அலட்சியம் செய்யக்கூடாது என கையேட்டில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : Tamil Nadu Rains: நாளை இந்த 6 மாவட்டங்களில் வெளுத்து வாங்க காத்திருக்கும் மழை – வானிலை மையம் எச்சரிக்கை

புகார் அளிப்பது தொடர்பான வழிமுறைகள்

பள்ளிகளில் குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் தொடர்பான புகார்களை கையாள்வதற்கான நடைமுறைகள் குறித்தும் கையேட்டில் விளக்கப்பட்டுள்ளது. பள்ளியில் அமைக்கப்படும் போக்சோ குழுவிடம் புகார் அளிக்கலாம் என்றும், குழுவில் குறைந்தபட்சம் 3 உறுப்பினர்கள் இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புகாரில் குற்றம்சாட்டப்படுபவர் தலைமை ஆசிரியர் அல்லது முதல்வராக இருந்தால், பள்ளிக்கல்வித் துறையின் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Follow Us