AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ரூ. 25 கோடி தர தயார்? தவெக எம்எல்ஏக்களை விலை பேச முயன்றார் எடப்பாடி பழனிசாமி.. அமைச்சர் அருண்ராஜ் பெரும் குற்றச்சாட்டு!

Minister Arunraj Latest Pressmeet : தமிழக வெற்றிக் கழகத்தின் எம்எல்ஏக்களை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி விலைக்கு வாங்க முயற்சி செய்திருந்ததாக சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். அதுகுறித்து இந்தப் பதிவில் விரிவாக பார்க்கலாம்.

ரூ. 25 கோடி தர தயார்? தவெக எம்எல்ஏக்களை விலை பேச முயன்றார் எடப்பாடி பழனிசாமி.. அமைச்சர் அருண்ராஜ் பெரும் குற்றச்சாட்டு!
அருண்ராஜ்- எடப்பாடி.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 25 Sep 2026 14:39 PM IST

திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் அமைச்சர் அருண்ராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிலைப்பாட்டில் குழப்பம் நிலவி வருகிறது. அந்த கட்சியை சேர்ந்தவர்கள் மீது சிபிஐ வழக்கு விசாரணைகள் நிலுவையில் இருந்து வருகின்றன. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்று தமிழக வெற்றிக் கழக அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்திய போது, அதிமுகவை சேர்ந்த சுமார் 25 எம்எல்ஏக்கள் தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர். இதில், 32- க்கும் அதிகமான அதிமுகவை சேர்ந்த மாவட்ட செயலாளர்களை அந்த கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி நீக்கி இருந்தார். அப்படி என்றால் இவர்கள் துரோகம் செய்தார்களா. அதிமுக என்ற கட்சியில் தற்போது ஒருங்கிணைப்பு சரியான முறையில் இல்லை. திராவிட முன்னேற்றக் கழகமும், அனைத்திந்திய திராவிட முன்னேற்றக் கழகமும் கள்ளத்தனமாக கூட்டணி அமைத்து தமிழக வெற்றி கழகத்தின் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க முயற்சி செய்தனர்.

தவெக எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க முயன்ற எடப்பாடி

சட்டமன்ற தேர்தல் முடிவுகளை தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி ஆட்சி அமைப்பதற்கு தேவையான பல கோடி ரூபாயை தயாராக வைத்திருந்தார். இதற்காக தமிழக வெற்றிக் கழகத்தின் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கவும் முயற்சிகளை மேற்கொண்டு இருந்தார். இதன் மூலம், துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிசாமி தான். தமிழக சட்டமன்ற தேர்தல் நேரத்தின் போது எடப்பாடி தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நிறுத்தப்பட்டிருந்த வேட்பாளரை பழனிசாமி ரூ.25 கோடி கொடுத்து விலைக்கு வாங்கினார். இதனால், கடைசி நேரத்தில் எடப்பாடி தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் போட்டியிட முடியாமல் போனது.

மேலும் படிக்க: “திமுக ஆட்சியில் ஏன் உரிய விசாரணை நடத்தவில்லை?”.. ஜெம் வீரமணி வழக்கில் சிபிஎம் சண்முகம் சரமாரி கேள்வி!

தவெக எம்எல்ஏக்களை விலை பேச முயன்றார் எடப்பாடி

ஒருவேளை, தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர் அந்த தொகுதியில் நேரடியாக போட்டியிட்டு இருந்தால் அமோக வெற்றி பெற்றிருப்பார். அத்துடன், எடப்பாடி பழனிசாமியும் டெபாசிட் வாங்கியிருக்க மாட்டார். இருந்தாலும், சுயேச்சை வேட்பாளர் ஒருவருக்கு தமிழக வெற்றி கழகம் சார்பில் ஆதரவு அளிக்கப்பட்டு இருந்தது. அவரும் எதிர்பார்த்தது போல வெற்றியை பெறவில்லை. இதுதான் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியின் துரோக வரலாறு ஆகும் என்று தெரிவித்தார்.

அமைச்சர் அருண்ராஜ் வைத்த மாபெரும் குற்றச்சாட்டு

தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைத்த நேரத்தில் அதிமுகவை சேர்ந்த எம்எல்ஏக்கள் கட்சி கொறடாவின் உத்தரவை மீறி தமிழக வெற்றி கழக அரசுக்கு ஆதரவு தெரிவித்து இருந்தனர். இவர்களை, தவெக தலைமை குதிரை பேரம் நடத்தி தங்களது கட்சிக்கு இழுத்ததாக அதிமுகவினர் பெரும் குற்றசாட்டை முன் வைத்திருந்தனர். இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழக எம்எல்ஏக்களை எடப்பாடி பழனிசாமி விலைக்கு வாங்கும் முயன்றதாக அமைச்சர் அருண்ராஜ் மற்றொரு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

மேலும் படிக்க: தரம் தாழ்ந்த செயல்கள் மூலம் சட்டமன்றத்தின் மாண்பை பாதிக்கும் முதல்வர்.. தலைமை பண்பும் கிடையாது – மேயர் பிரியா காட்டம்..

Follow Us