AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

“திமுக ஆட்சியில் ஏன் உரிய விசாரணை நடத்தவில்லை?”.. ஜெம் வீரமணி வழக்கில் சிபிஎம் சண்முகம் சரமாரி கேள்வி!

Gem Veeramani POCSO Case: தொழிலதிபர் ஜெம் வீரமணி மீதான போக்சோ வழக்கில் திமுக ஆட்சிக்காலத்தில் ஏன் உரிய விசாரணை நடத்தப்படவல்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார். பாலியல் குற்றங்களில் சமரசமின்றி போராடி வரும் நிலையில், இவ்வழக்கில் தொடர்புடைய அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

“திமுக ஆட்சியில் ஏன் உரிய விசாரணை நடத்தவில்லை?”.. ஜெம் வீரமணி வழக்கில் சிபிஎம் சண்முகம் சரமாரி கேள்வி!
சிபிஎம் சண்முகம்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 25 Sep 2026 13:31 PM IST

சென்னை, செப்.25: தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஜெம் கிரானைட்ஸ் அதிபர் வீரமணி மீதான போக்சோ வழக்கு, நாளுக்கு நாள் புதிய அரசியல் திருப்பங்களைச் சந்தித்து வருகிறது. சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் தொழிலதிபர் வீரமணி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சூழலில், இச்சம்பவத்தில் ஆரம்பக்கட்டத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், முந்தைய விசாரணையில் ஏற்பட்ட தாமதங்கள் குறித்தும் பல்வேறு அரசியல் தலைவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், முந்தைய திமுக ஆட்சியின் போது இப்புகார் மீது ஏன் உரிய விசாரணை நடத்தப்பட்டு விரைவான நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனப் பகிரங்கமாகக் கேள்வி எழுப்பியுள்ளது அரசியல் வட்டாரத்தில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

இதையும் படிக்க: “தவெக அரசு அமைந்ததால் மட்டுமே ஜெம் வீரமணி வழக்கு வெளிவந்தது”.. திமுகவை சரமாரியாக சாடிய துரை வைகோ!

“திமுக ஆட்சியில் தாமதமானது ஏன்?”:

செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், ஜெம் வீரமணி விவகாரத்தில் ஏற்கனவே புகார் அளிக்கப்பட்ட நிலையிலும், முந்தைய திமுக அரசின் ஆட்சிக்காலத்தில் அதற்கான உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்படாமல் நிலுவையில் வைக்கப்பட்டிருந்தது ஏன் எனக் கேள்வி எழுப்பினார். பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு நீதி கிடைக்கச் செய்ய வேண்டிய சூழலில், காவல்துறை தரப்பில் முறையான விசாரணைகள் தாமதிக்கப்பட்டதற்கான காரணங்களை அரசு தெளிவாக விளக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

அமைச்சரின் கேள்விக்கு பதிலடி:

இவ்வழக்கில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு என்னவென்று அமைச்சர் ராஜ்மோகன் கேள்வி எழுப்பியிருந்தது குறித்துப் பேசிய பெ. சண்முகம், இடதுசாரி இயக்கங்கள் எப்போதும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் சமரசமின்றிப் போராடி வருவதைச் சுட்டிக்காட்டினார். “பெண்கள் மீதான வன்கொடுமைகள், குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் எதுவாக இருந்தாலும், அதில் யார் சம்பந்தப்பட்டிருந்தாலும் மார்க்சிஸ்ட் கட்சி ஒருபோதும் சமரசம் செய்துகொண்டதில்லை. எனவே, எங்களின் கருத்து என்னவென்று அமைச்சர் கேட்பதே எங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது” என்று அவர் பதிலடி கொடுத்தார்.

இதையும் படிக்க: ஜெம் வீரமணி வழக்கு.. “திமுக ஆட்சியில் யாரையும் காப்பாற்ற உத்தரவிடவில்லை!”.. மு.க. ஸ்டாலின் பாய்ச்சல்!!

குற்றவாளிகளுக்கு தண்டனை கோரிக்கை:

ஜெம் வீரமணி மீதான போக்சோ வழக்கில் சட்டத்தின் ஆட்சி முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்திய பெ. சண்முகம், இந்த வழக்கை எந்தவித அரசியல் தலையீடும் இன்றி நேர்மையாகவும் விரிவாகவும் விசாரிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். இக்குற்றச்சம்பவத்தில் தொடர்புடைய மற்றும் உடந்தையாக இருந்த அனைவரும் சட்டத்தின் எல்லைக்குள் கொண்டுவரப்பட்டு கடுமையான தண்டனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு உரிய நீதியை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Follow Us