AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

“தவெக அரசு அமைந்ததால் மட்டுமே ஜெம் வீரமணி வழக்கு வெளிவந்தது”.. திமுகவை சரமாரியாக சாடிய துரை வைகோ!

Durai Vaiko Slams DMK Govt: மதுராந்தகத்தில் உரையாற்றிய துரை வைகோ, ஜெம் கிரானைட்ஸ் வீரமணி மீதான போக்சோ வழக்கில் திமுக ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்படாமல் மூடி மறைக்க முயன்றதாகக் கடுமையாகக் குற்றம் சாட்டினார். தவெக தலைமையிலான அரசு அமைந்த பிறகே வழக்கு விசாரணை நேர்மையாகத் தீவிரமடைந்துள்ளதாகவும், இந்த விவகாரத்தில் ஸ்டாலின் மற்றும் ரகுபதி பதிலளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

“தவெக அரசு அமைந்ததால் மட்டுமே ஜெம் வீரமணி வழக்கு வெளிவந்தது”.. திமுகவை சரமாரியாக சாடிய துரை வைகோ!
துரை வைகோ
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 25 Sep 2026 12:13 PM IST

செங்கல்பட்டு, செப்.25: தமிழகத்தையே உலுக்கியுள்ள ஜெம் கிரானைட்ஸ் அதிபர் வீரமணி சம்பந்தப்பட்ட போக்சோ பாலியல் அத்துமீறல் வழக்கு, மாநில அரசியல் களத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. மதுராந்தகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்றுப் பேசிய துரை வைகோ, இவ்வழக்கில் முந்தைய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து அடுக்கடுக்கான கேள்விகளையும் குற்றச்சாட்டுகளையும் முன்வைத்தார். குறிப்பாக, தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுத் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தலைமையில் புதிய அரசு அமைந்த பிறகே இந்த விவகாரத்தில் உண்மையான விசாரணையும் அதிரடி நடவடிக்கைகளும் சாத்தியமாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இதையும் படிக்க: ஜெம் வீரமணி வழக்கு.. பெண் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு.. டிஜிபி அதிரடி உத்தரவு!!

முந்தைய அரசின் மெத்தனப் போக்கு:

வழக்கின் பின்னணி குறித்துப் பேசிய துரை வைகோ, 2024-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திலேயே இந்த விவகாரம் தொடர்பான வீடியோ ஆதாரங்களுடன் காவல் துறையிடம் புகார் அளிக்கப்பட்டதாகத் தெரிவித்தார். ஆனால், பல மாதங்களாக எந்தவித விசாரணையோ அல்லது வழக்கின் தொடர்புடைய இடங்களில் சோதனையோ நடத்தப்படவில்லை என்று சாடினார். 2025 அக்டோபரில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்பட்ட நிலையிலும், வழக்கை முடித்து வைக்கவே தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், நீதிமன்றம் தலையிட்டு வழக்கை முடிக்க அனுமதிக்க முடியாது என்றும், மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என்றும் உத்தரவிட்ட பின்னரே வழக்கு மறுஜீவன் பெற்றதாகவும் அவர் விளக்கினார்.

திமுகவுக்கு அடுக்கடுக்கான கேள்விகள்:

முந்தைய ஆட்சியில் சட்டத்துறை அமைச்சராக இருந்த ரகுபதி மற்றும் முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆகியோருக்கு நேரடி கேள்விகளை எழுப்பிய துரை வைகோ, வழக்கை மூடி மறைக்க முயற்சி செய்தது ஏன் என்றும், பிப்ரவரியில் முடிவறிக்கை (Closure Report) தாக்கல் செய்ய முயன்றதன் பின்னணி என்ன என்றும் கேள்வி எழுப்பினார். இது ஒரு சிறுமி சம்பந்தப்பட்ட பிரச்சினை மட்டுமல்ல என்றும், நூற்றுக்கணக்கான சிறுமிகள் பாதிக்கப்பட்டிருக்கும் தீவிரமான குற்றச்செயல் என்றும் கூறிய அவர், தமிழக மக்களுக்கு முந்தைய ஆட்சியாளர்கள் உரிய பதிலளிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இதையும் படிக்க: ஜெம் வீரமணி வழக்கு.. “திமுக ஆட்சியில் யாரையும் காப்பாற்ற உத்தரவிடவில்லை!”.. மு.க. ஸ்டாலின் பாய்ச்சல்!!

அரசியல் களத்தில் வெடித்த விவாதம்:

இவ்வழக்கு தொடர்பாக அரசியல் அரங்கில் நிலவும் விவாதங்கள் மேலும் சூடுபிடித்துள்ள நிலையில், குற்றச்சாட்டு எழுப்பப்பட்டுள்ள தரப்பில் இருந்து விளக்கங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும், பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்பதில் எந்தவித சமரசமும் செய்யக் கூடாது என்றும், இந்த விவகாரத்தில் தொடர்புடைய சிறுமிகள் மற்றும் சாட்சிகளுக்குத் தகுந்த பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன. புதிய அரசு அமைக்கப்பட்ட பிறகு அமைக்கப்பட்டுள்ள சிறப்புப் புலனாய்வுக் குழுவின் (SIT) மூலம் இவ்வழக்கில் மேலும் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவரும் என்றும், அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us