AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம்.. துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி பெண் கொலை.. கணவர் கைது.. நிர்கதியான 3 குழந்தைகள்!

Salem Murder : சேலம் மாவட்டத்தில் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாக மனைவியை துப்பட்டாவால் கழுத்தை நெறித்து கொலை செய்த கணவன் எடப்பாடி காவல் நிலையத்தில் சரணடைந்தார் . இதனால், அவர்களது 3 குழந்தை கள் ஆதரவின்றி நிர்கதியாகி உள்ளனர் .

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம்.. துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி பெண் கொலை.. கணவர் கைது.. நிர்கதியான 3 குழந்தைகள்!
மணிகண்டன், நந்தினி.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 11 Nov 2026 15:59 PM IST

சேலம் மாவட்டத்தில் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாக மனைவியின் கழுத்தை இறுக்கி கணவர் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே உள்ள சங்கோதி பகுதியில் வசித்து வருபவர் மணிகண்டன் ( 33 வயது). இவரது மனைவி நந்தினி ( 28 வயது). மணிகண்டன் விசைத்தறி தொழில் செய்து வருகிறார். தம்பதிக்கு சஞ்சனா ( 9 வயது), தாரணிகா ( 6 வயது) ஆகிய இரு மகள்களும், வேல்முருகன் ( 4 வயது) என்ற மகனும் உள்ளனர். இந்த நிலையில், மனைவி நந்தினி அடிக்கடி நீண்ட நேரம் செல்போனில் பேசி வந்ததாக கூறப்படுகிறது. இதை பார்த்த அவரது கணவர் மணிகண்டன் கண்டித்ததாக தெரிகிறது. இதில், மனைவி மீது நீண்ட நாட்களாக மணிகண்டனுக்கு சந்தேகம் இருந்து வந்துள்ளது.

கணவன்- மனைவி இடையே கடும் வாக்குவாதம்

இதன் காரணமாக கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், சம்பவத்தன்று வேலைக்கு சென்ற மணிகண்டன் இரவு வேலை முடிந்து வீடு திரும்பியபோது மது போதையில் வந்திருந்தார். அப்போது, எதற்காக மது அருந்திவிட்டு வீட்டுக்கு வருகிறீர்கள் என்று மணிகண்டனை, அவரது மனைவி நந்தினி கண்டித்ததாக தெரிகிறது. இதில், அவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு முற்றி உள்ளது. அத்துடன், உனது நடத்தை சரி இல்லை என்று மணிகண்டன் கூறி கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

மேலும் படிக்க: ரூ.400 கோடி லஞ்ச புகார்.. ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் சரணடைந்த முக்கிய நபர்.. வழக்கில் அடுத்த பரபரப்பு!

மனைவியின் கழுத்தை நெறித்து கொன்ற கணவன்

இதனால், தம்பதி இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது. இதில், ஆத்திரம் அடைந்த மணிகண்டன் தனது மனைவியின் துப்பட்டாவால், அவரது கழுத்தை கொடூரமான முறையில் இறுக்கினார். இதனால், மூச்சுத் திணறல் ஏற்பட்டு நந்தினி மயங்கி விழுந்தார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த மணிகண்டன், அவரை சோதித்த போது உயிரிழந்து இருந்தது தெரியவந்தது. இந்த சம்பவத்தின் போது சத்தம் கேட்டு தூங்கிக் கொண்டிருந்த 3 குழந்தைகளும் எழுந்து பார்த்தபோது தாய் சடலமாக கிடப்பதை பார்த்து கதறி அழுதனர்.

எடப்பாடி காவல் நிலையத்தில் சரணடைந்த கணவன்

இந்த சத்தம் கேட்டு மணிகண்டனின் தாய் ராஜாதி மற்றும் உறவினர்கள் சம்பவ இடத்தில் குவியத் தொடங்கினர். இதை தொடர்ந்து, மணிகண்டன் வீட்டிலிருந்து வெளியேறி எடப்பாடி காவல் நிலையத்தில் சரணடைந்தார். இது குறித்து, அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க: உள்ளாட்சி தேர்தல் விவகாரத்தில் தமிழக அரசு கைகள் கட்டப்பட்டுள்ளது.. உயர்நீதிமன்றத்தில் அரசு தரப்பு விளக்கம்!

Follow Us