AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

நாளை மறுநாள் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. தென் மாவட்டங்களில் தொடரும் மழை.. எத்தனை நாட்களுக்கு?

Tamil Nadu Rainfall Alert: இன்று ராமநாதபுரம் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், சிவகங்கை, விருதுநகர், தேனி, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை மறுநாள் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. தென் மாவட்டங்களில் தொடரும் மழை.. எத்தனை நாட்களுக்கு?
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 11 Nov 2026 14:42 PM IST

நவம்பர் 11, 2026: வங்கக்கடலில் வரும் நவம்பர் 13-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுமார் 5.8 கி.மீ. உயரம் வரை தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நவம்பர் 13-ம் தேதி தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும். இது வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெறக்கூடும்.

மாவட்ட வாரியாக மழை முன்னறிவிப்பு:

நவம்பர் 11: இன்று ராமநாதபுரம் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், சிவகங்கை, விருதுநகர், தேனி, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் லேசானது முதல் மிக லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

நவம்பர் 12: தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோர தமிழகத்தின் இதர பகுதிகள் மற்றும் புதுச்சேரியில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஏனைய தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

மேலும் படிக்க: தென்காசியில் அதிர்ச்சி.. மாவட்ட நூலகத்தில் 2200 போலி நூல்கள்.. அகல் விளக்கு பதிப்பகத்துடையது!

நவம்பர் 13: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோர தமிழகத்தின் ஓரிரு இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

நவம்பர் 14: தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். வட கடலோர தமிழகத்தின் ஒருசில இடங்கள் மற்றும் புதுச்சேரியில் மிக லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

மேலும் படிக்க: “உயிர்காக்கும் மருந்துகளுக்கு தட்டுப்பாடா?”.. முதல்வர் மருந்தகங்களில் நிலவும் அவல நிலையால் மக்கள் கடும் அவதி!!

நவம்பர் 15: ராமநாதபுரம், விருதுநகர், தேனி, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், வட கடலோர தமிழகத்தின் ஒருசில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

நவம்பர் 16 மற்றும் 17: சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். நவம்பர் 16-ம் தேதி தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசான மழையும், நவம்பர் 17-ம் தேதி தெற்கு கடலோர தமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது. ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

சென்னைக்கான வானிலை முன்னறிவிப்பு:

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று (நவம்பர் 11), நாளை (நவம்பர் 12) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மிக லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31 முதல் 32 டிகிரி செல்சியஸ் வரையிலும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 முதல் 25 டிகிரி செல்சியஸ் வரையிலும் இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Follow Us