AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

உள்ளாட்சி தேர்தல் விவகாரத்தில் தமிழக அரசு கைகள் கட்டப்பட்டுள்ளது.. உயர்நீதிமன்றத்தில் அரசு தரப்பு விளக்கம்!

Tamil Nadu Local Body Election : தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு எப்போது வெளியிடப்படும் என்பது குறித்த தகவலை சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பான மனுவுக்கு அரசு விள க்கம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது .

உள்ளாட்சி தேர்தல் விவகாரத்தில் தமிழக அரசு கைகள் கட்டப்பட்டுள்ளது.. உயர்நீதிமன்றத்தில் அரசு தரப்பு விளக்கம்!
தமிழக அரசு உத்தரவு
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 11 Nov 2026 15:19 PM IST

தமிழகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருவதன் காரணமாக உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை வெளியிட முடியாத நிலை இருப்பதாக உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. தமிழகத்தில் 37 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்யக் கோரி செங்கல்பட்டை சேர்ந்த வழக்கறிஞர் பாஸ்கரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு குறித்த காலத்தில் வார்டு மறுவரையறை, இட ஒதுக்கீடு நடைமுறைகளை முடித்து தேர்தல் நடத்துவதற்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று புதன்கிழமை நீதிபதி செந்தில்குமார் முன் விசாரணைக்கு வந்தது.

உள்ளாட்சி தேர்தலில் அரசியல் சட்டப்பிரிவு மீறல்

அப்போது, 5 ஆண்டுகள் பதவிக்காலம் முடியும் முன்னரே தேர்தல் நடத்த வேண்டு என்ற அரசியல் சட்டப்பிரிவு மீறப்பட்டுள்ளது என்றும், சிறப்பு அதிகாரிகளின் பதவிக்காலம் நீட்டித்தது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என்றும் மனுதாரர் தரப்பில் வாதம் முன் வைக்கப்பட்டது. இதற்கு தமிழக அரசு சார்பில் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணன் ஆஜராகி கடந்த மாதம் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது.  மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிந்த பின்னர்தான் வார்டுகள் மறு வரையறை செய்யப்படும். அதன் பின்னரே மற்றும் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடு குறித்து முடிவெடுக்கப்பட்டு பின்னர் ஊரக உள்ளாட்சி தேர்தல் குறித்து அறிவிப்பு வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க: ரூ.400 கோடி லஞ்ச புகார்.. ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் சரணடைந்த முக்கிய நபர்.. வழக்கில் அடுத்த பரபரப்பு!

உள்ளாட்சி தேர்தல் பணிகளுக்கு 240 நாள்கள் தேவை

அத்துடன், மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் முடிந்த பிறகு, வார்டு மறுவரை செய்வதற்கு 120 நாட்களும், பட்டியல் மற்றும் பழங்குடியின மக்களுக்கான இட ஒதுக்கீடு குறித்து முடிவு செய்ய 30 நாட்களும், தேர்தலுக்கு நடவடிக்கைகளுக்கு 90 நாள்கள் என மொத்தம் 240 நாட்கள் தேவைப்படுவதாக குறிப்பிட்டார். இந்தப் பணிகள் முடிவடையும் வரை வேறு பணிகள் மேற்கொள்ள முடியாது. இதனால், தமிழக அரசின் கைகள் கட்டப்பட்டுள்ளதாக தெரிவித்தார். திடீரென கிட்ட நீதிபதி, உள்ளாட்சி தேர்தலில் மட்டும் இது போன்ற பிரச்சனைகள் எதற்காக வருகிறது.

தேர்தல் ஆணையம் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு

பதவி காலம் முடிய போகிறது என்று தெரிந்தும் மாநில தேர்தல் ஆணையம், தேர்தல் நடத்த ஏன் முடிவெடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பினார். தொடர்ந்து, இந்த மனுவுக்கு 3 வாரங்களில் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கும், மாநில தேர்தல் ஆணையத்துக்கும் உத்தரவிட்ட நீதிபதி, தேர்தல் ஆணையம் நடவடிக்கை குறித்து பதில் மனு தாக்கல் செய்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் படிக்க: தென்காசியில் அதிர்ச்சி.. மாவட்ட நூலகத்தில் 2200 போலி நூல்கள்.. அகல் விளக்கு பதிப்பகத்துடையது!

Follow Us