SK 27 படத்தை வெங்கட் பிரபுதான் இயக்க வேண்டியது – தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன்
Sathya Jyothi Thyagarajan talks about SK 27 movie | தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பாளராக வலம் வருபவர் தயாரிப்பாளர் சத்ய ஜோதி தியாகராஜன். இவர் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் சிவகார்த்திகேயனின் 27-வது படம் குறித்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan). இவரது நடிப்பி தமிழ் சினிமாவில் இதுவரை மொத்தம் 25 படங்கள் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. மேலும் இவரது நடிப்பில் வெளியான படங்களில் பெரும்பாலான படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஹிட் படங்களில் நடித்து முன்னனி நடிகராக உள்ளவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் தனது 26-வது படமான சேயோன் படத்தின் பிசியாக நடித்து வருகிறார். மேலும் இந்தப் படம் அடுத்த 2027-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் முன்னதாக நடிகர் சிவகார்த்திகேயன் மதராஸி படத்தில் நடித்துக் கொண்டு இருந்த போதே இயக்குநர் வெங்கட் பிரபு உடன் கூட்டணி அமைக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது.
ஆனால் அடுத்தப் படத்திற்கு இயக்குநர் சுதா கொங்கரா உடன் கூட்டணி வைத்தார். இதனைத் தொடர்ந்து வெங்கட் பிரபு உடனான படம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சிவகார்த்திகேயன் இயக்குநர் சிவக்குமார் முருகேசன் உடன் தனது சேயோன் படத்திற்காக கூட்டணி வைத்தார். இந்த நிலையில் தயாரிப்பாளர் சத்ய ஜோதி தியாகராஜன் அளித்தப் பேட்டி ஒன்று சமீபத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.




SK 27 படத்தை வெங்கட் பிரபுதான் இயக்க வேண்டியது:
முதலில், SK 27 திரைப்படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்குவதாக இருந்தது, ஆனால் சில காரணங்களால் அந்த ஒத்துழைப்பு சாத்தியமாகவில்லை. தற்போது, பார்க்கிங் திரைப்படத்தின் இயக்குநருடன் இந்தப் பணியைத் தொடங்கியுள்ளோம். கதையை எங்களுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் மிகவும் பிடித்திருந்ததால், இதில் இணைய ஒப்புக்கொண்டோம். இதற்கான ஒப்பந்தப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. அவர் நிறைய புதிய சிந்தனைகளைக் கொண்ட ஒரு இளைஞர் என்று நான் கருதுகிறேன் என்று தயாரிப்பாளர் சத்ய ஜோதி தியாகராஜன் வெளிப்படையாக பேசியுள்ளார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… இந்த பிராங் நல்லா இல்ல.. ஜூனியர் பிக் பாஸ் கொடுத்த சீக்ரட் டாஸ்க்கால் காண்டான போட்டியாளர்கள்!
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
#SK27 🎬 – Originally, #VenkatPrabhu was supposed to direct the film, but due to some reasons, the collaboration couldn’t materialise. We are now working on the project with the director of #Parking.
Both we and #Sivakarthikeyan liked the story and agreed to come on board. The paperwork is currently underway. I find him to be a youngster with lots of new ideas.
– Sathya Jyothi Thyagarajan https://t.co/exQ9RmsSsA— Movies Singapore (@MoviesSingapore) November 10, 2026
Also Read… Jailer 2: அட அது இல்லையா? ஜெயிலர் 2 படத்தின் ஓடிடி ரிலீஸில் ரசிகர்களுக்கு ஷாக்!