முடிஞ்சா கைய வை.. தன்யாவிடம் கைகலப்பில் ஈடுபட்ட முகேஷ் – பரபரப்பில் பிக் பாஸ் வீடு!
Dhanya And Mukesh Fight: தமிழில் பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றுவருகிறது. இந்த நிகழ்ச்சியானது 10வது வாரத்தில் உள்ள நிலையில், சிறப்பாக டாஸ்குகள் மூலம் ஒளிபரப்பாகிவருகிறது. இந்நிலையில் இன்று (10/11/2026) வெளியான 3வது ப்ரோமோவில், தன்யாவிடம் முகேஷ் சண்டையிட நினைக்கும் ப்ரோமோ வெளியாகி இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சின்னத்திரை மக்கள் மத்தியில் பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சியாக இருந்துவருவது பிக் பாஸ் சீசன் 10 (Bigg Boss Season 10). இந்த நிகழ்ச்சியானது மக்கள் மத்தியில் மிகவும் பிரம்மாண்டமான வரவேற்பை பெற்றுவருகிறது. இந்த பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) தொகுப்பாளராக தொகுத்துவரும் நிலையில், கிட்டத்தட்ட 9 வாரங்களை கடந்துள்ளது. மேலும் 10வது வாரத்தில் இந்த நிகழ்ச்சியானது இருக்கும் நிலையில், மொத்தம் இந்த வீட்டில் 12 போட்டியாளர்கள் மட்டுமே இருகிறார்கள். இந்த வாரத்தில் ஜூனியர் பிக் பாஸ் என்ற டாஸ்க் இருக்கும் நிலையில், அந்த பதவிக்காக மற்ற போட்டியாளர்கள் சண்டையிடுவது தொடர்பான ப்ரோமோ வெளியாகி இணையத்தில் வைரலாகிவந்தது.
அந்த விதத்தில் இன்று (10/11/2026) வெளியான 3வது ப்ரோமோவில், தன்யாவிடம், முகேஷ் வம்பிழுக்கும் ப்ரோமோ வெளியாகி தீயாக வைரலாகிவருகிறது. மேலும் இந்த சண்டை உண்மையா? அல்லது பொய்யா என ரசிகர்கள் கருத்துக்களை பகிர்ந்துவருகிறார்கள்.




இதையும் படிங்க: அவர் சண்டையிடுவதை பார்த்தல் ஹீரோவே தோற்றுவிடுவார்கள்.. சாய் பல்லவியை புகழ்ந்த மம்முட்டி!
தன்யாவிடம் கைகலப்பில் ஈடுபட்ட முகேஷ்:
இந்த ப்ரோமோவில், தன்யா , முகேஷின் காலை தெரியாமல் மிதித்துவிட்டேன் என கூறுகிறார். உடனே முகேஷ் எது எவ்வாறு தெரியாமல் மிதிப்பதை, தெரிஞ்சேதான் மிதித்தாய் என அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் தன்யாவை தனது கையை கொண்டு முகேஷ் தள்ளிவிடுவதுபோல இந்த ப்ரோமோவில் உள்ளது. மேலும் வீட்டில் உள்ள மற்ற போட்டியாளர்கள் முகேஷ் மற்றும் தன்யா இருவரையும் தடுத்திருந்தனர்.
இதையும் படிங்க: விஜய் ஆண்டனியின் அப்பாகுட்டி படத்திலிருந்து வெளியானது கிளிம்ஸ் வீடியோ
ஆனாலும் முகேஷ், தன்யாவை தனது கையை கொண்டும், தோள்பட்டையை கொண்டும் அவரை வேண்டுமென்றே வம்புக்கு இழுப்பதுபோல செய்திருந்தார். உடனே அவரை சாதிகா மற்றும் அவினாஷ், முகேஷை தனியாக இழுத்துக்கொண்டு சென்ற நிலையில், அவர்களிடமும் அவர் கத்தியுள்ளார். இது தொடர்பான ப்ரோமோ வெளியாகி தற்போது இணையத்தில் தீயாக பரவிவருகிறது.
பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியின் 65வது நாளின் 3வது ப்ரோமோ குறித்த எக்ஸ் பதிவு:
#Day65 #Promo3 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 10 – இன்று இரவு 9:30 மணிக்கு.. நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason10 #Ottikichi #VijaySethupathi #CarniVizha #BiggBossSeason10Tamil #BiggBoss10 #BiggBossSeason10 #BiggBossTamilBB10 #VijayTV #VijayTelevision https://t.co/rSTbC1EVCS
— Vijay Television (@vijaytelevision) November 10, 2026
இந்த பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் இந்த வாரத்தில், இந்த வீட்டில் பிக் பாஸ் வாய்ஸ் கேட்காது. அதற்க்கு பதிலாக வினோத் பாபு ஜூனியர் பிக் பாஸாக இருந்து போட்டியாளர்களை கண்காணித்துவருகிறார். இந்நிலையில் அந்த பதவியில் யாரை சிறப்பாக செய்துவருகிறாரோ, அவருக்கு எவிக்ஷன் ஃப்ரீ பாஸ் கிடைக்கும் என்ற நிலையில், அந்த பதவிக்காக ஜேசன் மற்றும் லக்ஷ்மி பிரியா இருவருமே போட்டிபோட்டுவருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.