AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Mammootty: அவர் சண்டையிடுவதை பார்த்தல் ஹீரோவே தோற்றுவிடுவார்கள்.. சாய் பல்லவியை புகழ்ந்த மம்முட்டி!

Mammootty Praises Sai Pallavi: தென்னிந்திய திரைப்படங்களில் முன்னணி ஹீரோவாக நடித்து. இன்றுவரையிலும் மக்கள் மத்தியில் பிரபலமான நாயகனாக இருந்துவருபவர் மம்முட்டி. இவர் தனுஷின் ஓம் படத்தில் இணைந்து நடித்துள்ளார். அதில் சாய் பல்லவியின் நடிப்பு குறித்து அவர் பாராட்டி பேசியுள்ளார்.

Mammootty: அவர் சண்டையிடுவதை பார்த்தல் ஹீரோவே தோற்றுவிடுவார்கள்.. சாய் பல்லவியை புகழ்ந்த மம்முட்டி!
சாய் பல்லவியைப் பாராட்டிய மம்முட்டிImage Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 09 Nov 2026 21:45 PM IST

மலையாளம் சினிமாவில் ஸ்டார் நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் நடிகர் மம்முட்டி (Mammootty). இவர் மலையாளம் மற்றும் தமிழ் போன்ற மொழிகளில் தொடர்ந்து திரைப்படங்களில் நாயகனாக நடித்து அசத்திவருகிறார். இவரின் நடிப்பில் இதுவரை கிட்டத்தட்ட 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாகியுள்ளது. இவர் தமிழில் இயக்குநர் ராம் (Director Ram) முதல் ராஜ்குமார் பெரியசாமி (Rajkumar Periasamy) போன்ற இயக்குநர்களுடன் படங்களில் பணியாற்றியுள்ளார் இவர் மலையாளத்தில் ஹீரோவாக படங்களில் நடித்து சிறப்பான வரவேற்பையும் பெற்றுவருகிறார். இந்நிலையில் பல ஆண்டுகளுக்கு பிறகு இவர் தமிழில் நடித்துள்ள புதிய திரைப்படம்தான் ஓம் (Om Movie).

இந்த படத்தில் நடிகர் தனுஷ் உடன் இணைந்து நடித்துள்ளார் மம்முட்டி. மேலும் இப்படம் குறித்த நிகழ்ச்சி ஒன்றின் மேடையில் பேசிய இவர். நடிகை சாய் பல்லவியின் நடிப்பு மற்றும் ஆக்ஷ்ன் குறித்து ஓபனாக பேசியுள்ளார்.

இதையும் படிங்க: அரசியல் மீது வெறுப்பு இல்லை… ஆனால் – சூர்யா சொன்னது இதுதானா?

நடிகை சாய் பல்லவி குறித்து வெளிப்படையாக பேசிய மம்முட்டி:

அந்த நிகழ்ச்சியில் பேசிய மம்முட்டி, “இந்த ஓம் திரைப்படத்தின் முதல் ஹீரோ அந்த படத்தின் கதைதான். இரண்டாவது ஹீரோ நடிகர் தனுஷ். அவருடன் பணியாற்றியது சிறப்பாக இருந்தது எனக்கு. மேலும் இப்படத்தின் மூன்றாவது ஹீரோ நடிகை சாய் பல்லவி. ஓம் படத்தில் இருப்பவர்கள் எல்லாருமே பெரிய பெரிய நடிகர்கள். அவர்களுடன் நடிக்கும்போது, எனக்கு எதாவது டிப்ஸ் கிடைக்கும் என நான் பார்த்துக்கொண்டே இருந்தேன். படத்தில் சாய் பல்லவியின் எக்ஸ்பிரஷன் எல்லாமே டக்கு டக்கு டக்குனு கொடுப்பாங்க.

இதையும் படிங்க: ஜூனியர் பிக் பாஸாக வினோத்.. அவரின் இடத்தை மாற்ற துடிக்கும் சாதிகா – லக்ஷ்மி பிரியா – வைரலாகும் ப்ரோமோ!

அவரின் விறுவிறுப்பான எக்ஸ்பிரஷன் எல்லாமே வந்து போறது தெரியவே செய்யாது. மேலும் அவரை இந்த படத்தின் ஹீரோ-னு சொல்றதுக்கு நிறைய விஷயம் இருக்கு. பொதுவா படத்தில் ஹீரோஸ் சண்டையிடுவார்கள், அதுபோல இப்படத்தில் அவர் சண்டையிடுவதை பார்த்தல் ஹீரோக்களே தோற்றுவிடுவார்கள். அவ்வளவு நல்ல சண்டையிடுகிறார். சண்டை என்றால் புருஸ்லீ மாதிரி பண்ணுறாங்க” என அதில் அவர் வெளிப்படையாக பேசியிருந்தார்.

சாய் பல்லவியின் கதாபாத்திரம் குறித்து படக்குழு வெளியிட்ட கிளிம்ப்ஸ் வீடியோ:

இந்த ஓம் திரைப்படத்தில் நடிகை சாய் பல்லவி நித்யா ரெட்டி என்ற வனத்துறை அதிகாரியாக நடித்துள்ளார். இவர் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் முதல் படமாக இப்படம் அமைந்துள்ளது. இதில் தனுஷ் ஹீரோவாக நடிக்க, மம்முட்டி மற்றும் ஸ்ரீலீலா உள்ளிட்ட நடிகைகளும் இணைந்து நடித்துள்ளனர். இப்படமானது வரும் 2026ம் ஆண்டு நவம்பர் 20ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us