AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Suriya: மிகவும் வேடிக்கை… சூர்யாவின் சீன் படத்தை பாராட்டிய நடிகர் மகேஷ் பாபு!

Mahesh Babu Praises Suriyas Scene Movie: தென்னிந்திய சினிமாவில் சிறந்த நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் மகேஷ் பாபு. இவர் தெலுங்கில் நாயகனாக நடித்து அசதிவருகிறார். இந்நிலையில் சமீபத்தில் சூர்யாவின் சீன் படத்தை இவர் பார்வையிட்டுள்ள நிலையில், அதை பாராட்டி எக்ஸ் பக்கத்தில் பதிவை வெளியிட்டுள்ளார்.

Suriya: மிகவும் வேடிக்கை… சூர்யாவின் சீன் படத்தை பாராட்டிய நடிகர் மகேஷ் பாபு!
சீன் படத்தை பாராட்டிய மகேஷ் பாபுImage Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 09 Nov 2026 19:07 PM IST

தெலுங்கு சினிமாவில் ரசிகர்கள் கொண்டாடும் நாயகனாக இருந்துவருபவர் மகேஷ் பாபு (Mahesh Babu). இவரின் நடிப்பில் டோலிவுட் சினிமாவில் பல படங்கள் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றிருக்கிறது. இறுதியாக இவரின் நடிப்பில் வெளியான திரைப்படம் குண்டூர் காரம் (Guntur Kaaram). இப்படம் கடந்த 2024ம் ஆண்டில் வெளியாகியிருந்த நிலையில், எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இந்த படத்திற்கு பிறகு இவர், இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி (Director S.S. Rajamouli) இயக்கத்தில் இணைந்த திரைப்படம்தான் வாரணாசி (Varanasi Movie). இந்த படத்தில் நடிகர் மகேஷ் பாபு அதிரடி மற்றும் அட்வெஞ்சர் கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த 2025ம் ஆண்டிலே தொடங்கிய நிலையில், இன்னும் முழுவதுமாக முடிவடையவில்லை.

இதில் பிரித்விராஜ் சுகுமாரன் மற்றும் பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட நடிகர்கள் இணைந்து நடித்துவருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த விதத்தில் நடிகர் மகேஷ் பாபு, சூர்யாவின் (Suriya) நடிப்பில் 2026ம் ஆண்டு நவம்பர் 6ம் தேதியில் வெளியான சீன் திரைப்படத்தை (Scene Movie) பார்வையிட்டுள்ளார். அந்த வகையில் இப்படத்தை பாராட்டி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவை வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க: சூர்யாவின் 49வது படத்தின் கதை இப்படியா இருக்கும்? டைட்டில் என்ன தெரியுமா?

சூர்யாவின் சீன் திரைப்படத்தை பாராட்டிய நடிகர் மகேஷ் பாபு:

அந்த பதிவில் நடிகர் மகேஷ் பாபு, “சீன் திரைப்படத்தை நான் பார்த்து ரசித்தேன், அருமை மற்றும் புத்திசாலித்தனம் மற்றும் வேடிக்கையாள நிறைந்திருந்தது. சூர்யா இன்பராஜாக அற்புதமாக நடித்துள்ளார். நஸ்ரியா மற்றும் நஸ்லென் இருவரும் சிறப்பாக நடித்துள்ளனர். இயக்குநர் ஜித்து மாதவன் எழுத்து மற்றும் சிறந்த இயக்கம், எல்லாவகையிலும் அசத்தலாக இருந்தது. கட்டாயம் பார்க்கவேண்டிய படம்” என அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சீன் திரைப்படத்தை பாராட்டி நடிகர் மகேஷ் பாபு வெளியிட்ட எக்ஸ் பதிவு:

இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில், சூர்யா நடித்து தயாரித்துவந்த திரைப்படம்தான் சீன். இந்த திரைப்படமானது கடந்த 2026ம் ஆண்டு நவம்பர் 6ம் தேதியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பற்றிருந்தது.

இதையும் படிங்க: இது சீன் தீபாவளி… வசூலில் ஹாட்ரிக் அடிக்கும் சூர்யா – வெளியானது அப்டேட்

இப்படத்தில் நஸ்ரியா மற்றும் நஸ்லென் இருவரும் இணைந்து முக்கியமான வேடத்தில் நடித்திருந்தனர். இப்படமானது வெளியாகி கிட்டத்தட்ட 4 நாட்களாகியுள்ள நிலையில், இதுவரை ரூ 145 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சூப்பர் ஹிட் வரவேற்பை பெற்றுவருகிறது.

Follow Us